உதயநிதி வெளியிட்ட 4 படங்களின் வெற்றி விழா, சென்னையில் மே 7-ந் தேதி, ரஜினிகாந்த் தலைமையில் நடக்கிறது.
கமல்ஹாசன் நடித்த `மன்மதன் அம்பு,' விஜய் நடித்த `குருவி,' சூர்யா நடித்த `ஆதவன்' ஆகிய படங்களை தயாரித்தவர், உதயநிதி ஸ்டாலின். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில், சூர்யா நடிக்கும் `7-ம் அறிவு' என்ற படத்தை தயாரிப்பதுடன், ராஜேஷ் எம். டைரக்ஷனில், `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட `விண்ணைத்தாண்டி வருவாயா,' `மதராச பட்டினம்,' `பாஸ் என்கிற பாஸ்கரன்,' `மைனா' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
இந்த 4 படங்களின் வெற்றி விழாக்கள், மே மாதம் 7-ந் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. விழாவுக்கு ரஜினிகாந்த் தலைமை தாங்குகிறார். 4 படங்களில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ரஜினிகாந்த் கேடயம் வழங்குகிறார்.

No comments:
Post a Comment