‘மாண்டலின்’ இசையில் புகழ்பெற்ற சீனிவாஸ் அவர்களின் சகோதரர் ‘மாண்டலின்’ ராஜேஷ் இசையமைத்து, இயக்கியிருக்கும் ‘Following My Heart’ என்ற இசை ஆல்பம் இன்று சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த ஆல்பத்தை திரைப்பட நடிகர் கமலஹாசன் வெளியிட்டார்.
இவ்விழாவில் நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் இசை துறை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆல்பத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
இதுகுறித்து மீரா ஜாஸ்மின் கூறும்போது,
நிறைய சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை இல்லை. மனசுக்கு பிடித்த சில படங்களில் மட்டும் நடித்தால் போதும் என்று நினைக்கிறேன். இப்போது, மலையாளத்தில் தற்போதைய கேரளா அரசியலை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.
இந்த ஆல்பத்தில் நான் நடிப்பதற்காக ராஜேஷ் என்னை அணுகியபோது, முதலில் நான் மறுத்தேன். இருந்தாலும், நான்தான் இந்த ஆல்பத்தில் நடிக்க வேண்டும் என ராஜேஷ் பிடிவாதமாக இருந்ததால் அவருக்காக நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆல்பம் மிகவும் நன்றாக வந்துள்ளது.
ராஜேஷூடன் காதலா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ராஜேஷை நான் அதிகமாக காதலிக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment