இந்தியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் பட்டியலில் அமீர்கான் உள்ளார். இவர் சமீபத்தில் நடித்து ரிலீசான ‘கஜினி’, ‘3 இடியட்ஸ்’ போன்றவை ‘லகான்’ படத்தைபோல வசூலை வாரி குவித்தன.
சம்பளம், வினியோக உரிமை, லாபத்தில் பங்கு என பல்வேறு வழிகளில் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி அவருக்கு வருமானம் வருவதாக கூறப்படுகிறது. சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை அமீர்கான் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்.
தற்போது 22 வீடுகளை அவர் ஒரே நேரத்தில் விலைக்கு வாங்கியுள்ளார். இந்த வீடுகள் உத்தரபிரதேச மாநிலம் சகாபாத்தில் உள்ளன. இந்த வீடுகள் அமீர்கானின் உறவினர்களுக்கு சொந்தமானவை. வீட்டை விற்க அவர்கள் முடிவு செய்து புரோக்கர்கள் வைத்து ஆள் தேடினார்கள்.
இந்த விவரம் அமீர்கானுக்கு தெரியவந்ததும் அவரே 22 வீடுகளையும் வாங்க முன்வந்தார். இந்த சொத்துக்களை தனது சகோதரர் மற்றும் சகோதரி பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அமீர்கான் கூறும்போது எனது உறவினர்களின் பாரம்பரிய வீடுகள் என்பதால் அவைகளை விற்க முடிவு செய்ததும் நானே வாங்கினேன். இது சென்டிமென்ட் காரணமாக எடுத்த முடிவு என்றார்.
No comments:
Post a Comment