ஜனாதிபதியின் ரூ.6 கோடி மதிப்புள்ள பென்ஸ் கார் பழுதடைந்துள்ளதால் மாற்று காரான அம்பாசிடர் காரில்தான் பிரணாப் முகர்ஜி இப்போது பயணம் செய்கிறார். ஜனாதிபதி செல்வதற்காக ரூ.6 கோடி செலவில் வாங்கப்பட்ட குண்டு துளைக்காத மெர்சிடஸ் பென்ஸ் கார் பயன்படுத்தப்பட்டது. பிரதிபா பாட்டீல் ஜனாதிபதியாக இருந்தபோது இந்த காரைதான் பயன்படுத்தினார். இந்த நிலையில் கடந்த 4 மாதத்துக்கு முன் இந்த கார் திடீரென பழுதானது. திடீரென இன்ஜின் செயலிழந்து கார் நடுரோட்டில் அடிக்கடி நின்றது. இதற்கிடையே பழுதடைந்த காரை ஜெர்மனியில் இருந்து வந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன இன்ஜினியர்கள் சோதனை செய்தனர். ஆனால், அவர்களால் இன்ஜின் கோளாறுக்கான காரணத்தையே கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனால், அந்த கார் ஜனாதிபதி மாளிகையில் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட காரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயன்படுத்துகிறார். இந்த கார் ஜனாதிபதியின் வாகன கான்வாயில் மாற்று காராக முன்பு இடம்பெற்றிருந்தது. இப்போது மாற்று காராக அம்பாசிடர் காரை அதிகாரிகள் சேர்த்துள்ளனர். அரசு அதிகாரிகளின் அடையாள சின்னமாக அம்பாசிடர் கார்கள் முன்பு இருந்தது. இப்போது, அம்பாசிடர் கார்களை பெரும்பாலான அதிகாரிகள் பயன்படுத்துவதே இல்லை. ஆனால், பல மாடல்களில் சொகுசு கார்கள் வந்தபோதும் அம்பாசிடர் காரில் பயணம் செய்வதையே அமைச்சராக இருந்தபோது பிரணாப் விரும்பினார். கடந்த 2004ம் ஆண்டு அவரது மகன் வாங்கிக் கொடுத்த ஃபோர்டு ஐகான் காரை அவரது அலுவலக ஊழியர்கள்தான் பயன்படுத்தினார்கள். அவர் தொடர்ந்து அம்பாசிடர் காரிலேயே சென்றார். இப்போது, ஜனாதிபதி ஆன பிறகு பிரணாப்புக்கு பிடித்தமான அம்பாசிடர் கார் இப்போது அவரது மாற்று காராகி உள்ளது.
No comments:
Post a Comment