அசாம் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இணையத் தளங்களில் போலியாக சித்தரிக்கப்பட்ட கலவர காட்சிகள் வெளியானது. வட கிழக்கு மாநில மக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அந்த போலி கலவர காட்சிகளை திட்டமிட்டு பரவவிட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 254 இணையத்தளங்கள் மூலம் வட கிழக்கு மாநில மக்களை அச்சுறுத்தும் வதந்தி பரவி இருப்பதை மத்திய அரசு கண்டுபிடித்தது. அந்த தளங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. புகழ் பெற்ற சமூக வலைத்தளங்களான பேஸ் புக், யூ டியூப், டுவிட்டர் போன்ற இணையத்தளங்களிலும் வட கிழக்கு மாநில மக்களை அச்சுறுத்தும் வதந்தி இடம் பெற்றிருந்தது. இதையடுத்து அந்த வலைப் பக்கங்களை உடனே நீக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
அதன்படி தாக்குதல் பீதி தரும் வலை பக்கங்களை பேஸ்புக் மற்றும் யூ டியூப் இணையத்தளங்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து நீக்கி விட்டன. ஆனால் டுவிட்டர் இணையத்தளம் மட்டும் இன்னும் அந்த பக்கங்களை நீக்காமல் உள்ளது. இதையடுத்து டுவிட்டர் இணையத்தளம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

No comments:
Post a Comment