‘அன்பே ஆருயிரே’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நிலா. ‘ஜாம்பவான்’, லீ‘, ‘மருதமலை’, ‘காளை’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
நிலாவும், ஆர்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் இணைத்து பேசப்பட்டார். அந்த தொழில் அதிபர் மனைவி திடீரென மரணம் அடைந்தார். அவர் சாவுக்கு நிலா காரணம் என விமர்சனங்கள் கிளம்பியது. போலீசாரும் நிலாவிடம் விசாரணை நடத்தினர்.
தற்போது இந்தி நடிகர் அர்ஜன் பாஜ்வாவை நிலா காதலிப்பதாக புது தகவல் பரவியுள்ளது. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிலா பேஷன் ஷோக்களை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் அர்ஜன் பாஜ்வா தவறாது கலந்து கொள்கிறார்.
No comments:
Post a Comment