'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'யுத்தம் செய்', 'நந்தலாலா' படங்களை இயக்கியவர் மிஷ்கின். அடுத்து 'ஸ்பைடர்மேன்' பாணியில் 'முகமூடி' என்ற சூப்பர் மேன் கதையை படமாக்கியுள்ளார். ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிலையில் படத்தை தணிக்கை செய்து தணிக்கை குழு படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி படத்தை தணிக்கை குழு வெகுவாக பாராட்டியுள்ளது. தமிழ் இதுபோன்ற படங்கள் வெளிவர வேண்டும் என்று தணிக்கை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனையடுத்து படம் ஆகஸ்ட் 31ந் தேதி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment