நடிகர் விஜய் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து திடீர் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். வடபழனியில் உள்ள ஜே.எஸ். திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. ரசிகர் மன்ற வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
விஜய்-ன் அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு விரைவில் வரப்போவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் மக்கள் இயக்கத்தின் மாநாடுகள் நடத்தப்பட்டன. விஜய் சுற்றுப்பயணம் செய்து அவற்றில் பங்கேற்றார். மக்கள் இயக்கத்துக்கு புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் ரசிகர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கூட்டத்தில் விஜய் பேசும்போது ஒவ்வொரு ரசிகனும் முதல் கடமையாக தங்களது குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும். அதன் பின்பு முடிந்த அளவு மக்களுக்கு நற்பணிகளை செய்யுங்கள் கிராமங்களுக்கு சென்று நற்பணிகளை செய்து நன்மதிப்பை ரசிகர்கள் பெற வேண்டும். வித்தியாசமாக, சிறப்பாக கவன, ஈர்ப்பு நற்பணிகளை செய்வோருக்கு அடுத்த வருடம் பரிசுகள் வழங்குவேன் என்றார்.
விஜய் பிறந்த நாளையொட்டி ரத்ததானம், ஏழைகளுக்கு உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்த ரசிகர்களுக்கு கூட்டத்தில் விஜய் பரிசுகள் வழங்கினார். மோதிரம், அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மக்கள் இயக்க மாநில தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என். ஆனந்த், செயலளார் ரவிராஜா, நிர்வாகிகள் சி.ராஜேந்திரன், ஏ.சி.குமார், பி.டி.செல்வக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment