ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, பிரணாப் முகர்ஜியின் வெற்றியை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பி.ஏ. சங்மா அறிவித்தார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று சங்மா வழக்கு தொடர்ந்தார்.

No comments:
Post a Comment