வீரசேகரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் பிரபலமாகி, மைனா மூலம் வெற்றி நாயகி ஆனவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளியில் மாமனாருடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் சூடேற்றிய அமலா பால் தமிழில் தெய்வத்திருமகன், வேட்டை என்று பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே பள்ளியில் படிக்கும் தானும் காதலிப்பதாக கூறுகிறார் அமலா பால்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் சினிமாவில் வருவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தவர் எனது அண்ணன் தான். தற்போது அவர் கப்பலில் வேலை பார்க்கிறார். சினிமாவில் என்னுடைய படங்களை பார்த்து நிறை, குறைகளை சொல்லுவார். தமிழ்பட உலகில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை, அது மைனா படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது விக்ரம் சாருடன் தெய்வத்திருமகன் படத்தில் நடித்து முடித்துள்ளேன். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. விக்ரம் சார் மிகுந்த நடிப்பு திறமை உடையவர். மற்றவர்களுடன் பழகுவதில் மென்மையானவர். படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து மிரண்டு போய்விட்டேன். அவர் உண்மையிலேயே கடின உழைப்பாளர் தான்.
நான் காதலிக்கவில்லை என்று பொய் சொல்லமாட்டேன். பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் அழகாக இருந்தான். அவன் மீது காதல் வயப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதை வெளிப்படுத்தியது இல்லை. அப்போது நிறைபேர் எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அதர்வாவுடன் முப்போழுதும் உன் கற்பனைகள் மற்றும் ஆர்யாவுடன் வேட்டை படத்தில் நடித்து வருகிறேன். படத்தில் ஆர்யா எப்போதும் ரொம்ப கலகலப்பாக இருப்பார். படசூட்டிங்கின் போது நிறைய உதவிகள் செய்தார். தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுகொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment