க்யூவில் நிற்க மாட்டேன் என்று அடம்பிடித்த த்ரிஷாவிலிருந்து, நேரா போய் ஓட்டு போடுங்க, ஏன் இவ்வளவு நேரம் நிக்கறீங்க என்று சக வாக்காளர்களை பச்சாதாபப்பட வைத்த அஜீத் வரை, இந்த தேர்தலில் கோடம்பாக்கத்தினரின் அக்கறை சற்று அதிகம்தான்! (கொளுத்துற வெயிலிலும் கோட் சூட்டோடு வந்தார் அஜீத். என்ன கொடுமை சரவணன் இது?)
வழக்கமாக ஓட்டுப்போடும் ஸ்ªல்லா மேரிஸ் கல்லு£ரியில் ரஜினியின் வருகைக்காக காத்து கிடந்தார்கள் போட்டோகிராபர்களும் பத்திரிகையாளர்களும். ஏராளமான தள்ளுமுள்ளுகளுக்கு இடையே வாக்களிக்க வந்த ரஜினி, எந்த பட்டனை அமுக்குகிறார் என்பது வரை படம் எடுத்தார்கள். ஆனால் யாருக்கு வாக்களித்தார் என்கிற விஷ§வலை வெளிச்சம் போட்டு காட்டினால் தேர்தல் ஆணையம் விரட்டி விரட்டி அடிக்குமாமே! அதனால் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தவர்கள் தங்களுக்குள் இதுபற்றி வியந்து கொண்டார்களே தவிர மற்றபடி கப்சிப். இதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத ரஜினி, தேர்தல் தினத்தன்றே முதல்வர் கலைஞருடன் பொன்னர் சங்கர் படம் பார்க்க போனார். (அதற்கு முன்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்தார். அதை தனி செய்தியாக காண்க)
ரஜினி வாக்களித்ததை மீடியாக்காரர்கள் படம் எடுத்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட கமல், தான் வாக்களிக்க வரும்போது ரொம்பவே உஷார் காட்டினார். எல்லாரையும் தள்ளிப் போங்க என்றார். இவரது வேண்டுகோளை ஏற்று புகைப்படக் காரர்கள் தள்ளிப் போய் நின்றாலும் அவர்கள் நின்ற இடத்திற்கே வந்து ஓட்டு போடுவதை பார்க்க முடிகிறதா என்று உறுதி செய்து கொண்டார். அப்புறம்தான் பட்டனையே அமுக்கினார்.
விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சாரத்தின் மீது விருப்பம் இல்லை போலும். காலையில் வாக்களிக்க வந்தால் மீடியாவின் கேள்விகளுக்கு உருப்படியான பதிலளிக்க வேண்டும். அல்லது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் தன் வாயால் சொல்ல வேண்டும் என்று நினைத்தார் போலிருக்கிறது. வாக்கு பதிவு முடிகிற நேரம் பார்த்து வந்தார். நிச்சயம் அரசியல் மாற்றம் வரும் என்பதுதான் அவர் உதிர்த்த முத்து.
சூறாவளி சுற்றுப்பயணம் செய்த வடிவேலு, நடிகர்கள் பிரசன்னா, பரத், கவிஞர் வைரமுத்து, ஆகியோரும் வாக்களித்தார்கள்.
- டாப்சியின் நம்பிக்கை
- போராளி படத்தில் அஞ்சிலி
- பிரபல வில்லன் நடிகர் மரணம்
- நீரா ராடியா கிளப்பிய புதிய சர்ச்சை
- அவன் இவன் ரிலீஸ் தியதி அறிவிப்பு
- தகிடுதத்த தங்கபாலுவை துரத்தியடிப்போம்; கராத்தே தி...
- நெய்வேலி அருகே மின்னணு எந்திரங்கள் உடைப்பு
- நானும் காதலித்தேன்: அமலா பால்
- ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீடியா கேமிராக்களில...
- 'அரசியல்வாதி போல் செயல்படும் அன்னா ஹஸாரே!'
- அரை நிர்வாண தரிசனம் தந்தார் பூனம் பாண்டே!
- பாடகி சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் ம...
- நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட்டது குறித்து தங்கபாலு...
- ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்!
- காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
- கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம்
- காங்கிரஸ் 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும...
- வாக்குகள் மூலம் அமைதிப்புரட்சி: ஜெயலலிதா
- பில்லா -2 அஜீத்தின் நாயகி யார்?
- விஜய்க்கும் ஹன்சிகாவுக்கும் சூப்பர் கெமிஸ்டிரி!
- தயாரிப்பாளருடன் மோதல்: வருத்தத்தில் தமன்னா
- தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ர...
- திருட்டு வழக்கில் சினிமா நடிகர் கைது
- காங்கிரஸிலிருந்து எஸ்.வி.சேகர் திடீர் நீக்கம் :தங்...
- அதிக அளவிலான வாக்குப் பதிவு-கட்சிகள் குழப்பம்-யாரு...
- 41 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: விஜயகாந்த்
- ஆளத் தெரிந்தவரே கலைஞரே முதல்வர்: வடிவேலு
- கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள...
- நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு


No comments:
Post a Comment