லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் 21 இடங்களில் போட்டியிடுகிறது. கார்த்திக் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் வீரண்ணராஜு, கம்பம் தொகுதியில் ரவிச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை சத்தியமூர்த்தி பவன் எதிரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னையில் தங்கியுள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் வீரண்ணராஜு கூறியதாவது:-
கடந்த 29-ந்தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்வாகிகளுடன் சென்னை வந்தேன். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அன்று இரவு தங்கியிருந்தபோது, போடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிவழகன், 2 பேருடன் வந்து ஊருக்கு செல்வோம் என்று கூறினார். இதையடுத்து கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனும், நானும் அவருடன் சென்றோம். லாட்ஜில் இருந்து ஆட்டோவில் ஏறி, எல்.ஐ.சி. கட்டிடம் அருகே வந்து இறங்கினோம். அங்கு தயார் நிலையில் இருந்த ஸ்கார்பியோ காரில் எங்களை ஏற்றிக் கொண்டனர். நடுவில் உள்ள இருக்கையில் என்னை உட்கார சொன்னார்கள். அறிவழகனும், ரவிச்சந்திரனும் பின்னால் ஏறிக் கொண்டனர்.
எனது அருகில் அடையாளம் தெரியாத 2 பேர் உட்கார்ந்து கொண்டனர். நீங்கள் யார்? எங்கே போகிறோம் என நான் அவர்களிடம் கேட்டேன். இதற்கு அவர்கள் பேசாமல் வா... எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் திகைத்துப்போய் இருந்தேன். இந்த நேரத்தில் எனது மனைவியிடமிருந்து எனக்கு போன் வந்தது. என்னை அவருடன் பேசுவதற்கு அனுமதிக்காமல் செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காக காரை நிறுத்தினார்கள். அப்போதுதான் காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி கட்டியிருப்பதை நான் பார்த்தேன். பின்னர் கார் புறப்பட்டதும் என்னை கீழே இறக்கி விடுகிறீர்களா என சத்தம் போட்டு காரில் இருந்து குதிக்கவா என்று நான் கோபமாக கேட்டேன். உடனே அருகில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார். இதனால் என்னால் எதுவும் பேசமுடியவில்லை.
பின்னர் மறுநாள் காலையில் கார் திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்தவர்களுக்கு ஒரு போன் வந்தது. உடனே என்னையும், கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனையும் கீழே இறக்கி விட்டுவிட்டு அறிவழகனை (போடி தொகுதி வேட்பாளர்) மட்டும் அழைத்துச் சென்று விட்டனர். போடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரது வெற்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் கட்சி வேட்பாளரை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.
நான் போட்டியிடும் தொகுதியில் (உசிலம்பட்டி) பார்வர்டுபிளாக் நிற்கிறது. ரவிச்சந்திரன் (கம்பம் தொகுதி) போட்டியிடும் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இவர்கள் தோற்றால் பரவாயில்லை என்று அ.தி.மு.க. நினைத் திருக்கலாம். இதனாலேயே எங்களை இடையில் இறக்கி விட்டு விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடத்தல் புகார் தொடர்பாக வேட்பாளர்கள் தங்கியிருந்த லாட்ஜில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இன்றைய பதிவுகள்...
- ஆர்யாவுக்கு திவ்யா தரும் மரியாதை
- கௌதமிடம் கதை கேட்ட விக்ரம்!
- ஸ்ரேயாவுடன் திருமணமா? - ராணா பதில்
- இன்னும் சில தினங்களில் தி.மு.க., அலை : ராமதாஸ்
- தமிழில் வாய்ப்பு கொடுங்க! - காவ்யா
- சித்தார்த்துடன் காதலா? - மழுப்பும் ஸ்ருதி
- நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம்: சிதம்பரம்
- சரியான நேரத்தில் வந்திருக்கு... புதிய படம் பற்றி வ...
- 'வேட்பாளரை அடிச்சான், கொடியை இறக்கச் சொன்னான், வாந...
- அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது: பாஜக
- விஜய் வந்து பார்க்கலையே!
- ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாத...
- சினிமாவில் ஹீரோவாக நடிச்சாலும் அரசியலில் `ஜீரோ'தான...
- கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் ...
- லயோலா கல்லூரி கருத்துகணிப்பு
- ஜெயலலிதாவை நான் சந்தித்ததாக செய்தி போடுவதா கூறுவதா...
- அதிமுகவுக்கு பிரசசாரம் செய்ய வரலை - விஜயகாந்த்
- மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக தே.மு.தி.க.வை தனித்...
- வைகோ நிலைமை துரதிர்ஷ்டவசமானது: பாஜக
- அழகிரியின் மிரட்டலுக்கு பணிந்தது தேர்தல் ஆணையம்
- ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டியவன...
- கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம...
- விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார்
- இந்தியா டுடே கருத்து கணிப்பு
- விஜய்காந்தின் அடி-உதை: ஜெயலலிதா பதில்
- மாணவி ஜெயலலிதாவின் ''ஈ அடிச்சான் காப்பி''-ப.சிதம்ப...
- வேட்பாளரை அடிப்பது அழகா? ஸ்டாலின் கேள்வி
- விஜயகாந்த்தை மேடையில் ஏற்றுவாரா ஜெ.? ஸ்டாலின்
- தி.மு.க.வுக்கு ஆதரவு நடிகர் கார்த்திக் பேட்டி
- ராணா போட்டோ ஷூட் ! சென்னையில் துவங்கியது...
- கலைஞர் காலைத்தொட்டு வணங்கினார் EVKS
No comments:
Post a Comment