சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நட்சத்திரங்கள் சின்னத்திரைக்குள் நுழைந்த காலம் மாறி, பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் கூட சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தது பற்றி முன்பொருமுறை கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதில் எந்த மனத்தடையும் இல்லை என்று கூறினார். காலம் அவரையும் சின்னத்திரைசிக்கு அழைத்து வந்துள்ளது.
மா தொலைக்காட்சியில் கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார் பிரகாஷ்ராஜ். 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு கொண்டதாம் இந்த கேம் ஷோ. தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களுடன் பிரகாஷ்ராஜின் மனைவி போனி வர்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷோவின் பெயர் இட்ஸ் மை ஷோ!

No comments:
Post a Comment