தமிழ் (டப்பகிங்) பேசும் தெலுங்கு படங்களுக்கு நேரடி தமிழ் படங்களுக்கு நிகரான பாடல் வெளியீடும், இசை வெளியீடும், அதுவும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரண்டு படங்களுக்கு ஆடியோ ரீலிஸ் கண்டுள்ள படங்கள் நாகார்ஜூனா - அனுஷ்கா ஜோடி நடித்த வம்பு படமும், மகேஷ் பாபு - அனுஷ்கா ஜோடி நடித்த பத்ரா படமுமாகத்தான் இருக்கும்! சென்னை ஆந்திரா கிளப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில் கலக்கலான இசை வெளியீடு கண்ட வம்பு, பத்ரா இரண்டு படமும் தெலுங்கில் ஹிட் ஆகி, தமிழில் டப்பாகி வரவிருக்கும் படங்கள் !
குருபிரம்மா ஆர்ட்ஸ் சார்பில் தமிழில் வரவிருக்கும் பத்ரா படத்திற்கும், பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிப்பில் தமிழில் வரவிருக்கும் வம்பு படத்திற்கும் ஒருசேர தமிழில் வசனம் எழுதியிருக்கும் வசனகர்த்தா ஏ.ஆர்.கே.ராஜராஜா, இந்த இரு படங்களுக்கும் தமிழில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களையும், பின்னணி பாடகர் - பாடகிகளையும் மேடையேற்றி கவுரவித்தது இவ்விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. ஆமாம் பின்னே... நேரடி தமிழ் பட இசைவெளியீட்டு விழாக்களில் பெரும்பாலும் பாடலாசிரியர்களும், பாடகர்களும் கவனிக்கப்படுவதே இல்லையே?!

No comments:
Post a Comment