பொன் வைத்த இடத்தில் பூ வைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. மறுபடியும் ஒரு பொன்னையே வைத்திருக்கிறார்கள்! எப்படி? தெலுங்கில் சூப்பர் ஹிட்டான மஹதீரா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிற உரிமையை வாங்கியிருக்கிறது உதயநிதியின் ரெட் ஜயன்ட் நிறுவனம். படத்தின் பெயர் மாவீரன்.
டப்பிங்தான் என்றாலும், அதற்கும் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தி ரசிகர்களை கவர திட்டமிட்டிருந்தார்கள். தனது மகன் நடித்த படம் என்பதால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இந்த விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார். முதல் குறுந்தகட்டை சிரஞ்சீவி வெளியிட ரஜினி பெற்றுக் கொள்வதாக திட்டம். ஆனால் தேர்தலில் ரஜினி போட்ட ஓட்டும், அது தொடர்பான வில்லங்கமும் அவரை அப்செட் ஆக்கியது. மீண்டும் மீடியாக்காரர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் எதையாவது கேட்டு, நாம் ஏதாவது சொல்லி... எதற்கு வம்பு? விழாவில் கலந்து கொள்வதாக கொடுத்த வாக்குறுதியை வாபஸ் பெற்றுவிட்டார் ரஜினி.
ரஜினி இல்லாவிட்டால் அந்த இடத்தை நிரப்ப பொறுத்தமானவர் கமல் மட்டும்தானே? ரஜினி வராததால் விழாவையே தள்ளி வைத்த படக்குழு, கமலிடம் விஷயத்தை சொல்ல அவரும் ஒப்புக் கொண்டார். இவருடன் மணிரத்னம், சிரஞ்சீவி என்று களைகட்டுகிறது விழா விவிஐபிகள் குழு. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜெகஞ்ஜோதியாக நடைபெறுமாம் மாவீரன் ஆடியோ விழா.

No comments:
Post a Comment