நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யையான நடிகை ரஞ்சிதா அவரை பற்றி படம் இயக்க போகிறாராம். நாடோடி தென்றல், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர், சாமியார் நித்தியானந்தாவுடன் சல்லாப காட்சிகளில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சில பல காலம் தலைமறைவாக இருந்தார் ரஞ்சிதா. ஆனால் தன்னுடைய படத்தையும் ரஞ்சிதா படத்தையும் மார்ப்பிங் முறையில் இணைத்துவிட்டதாக ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் இன்றளவும் பேட்டி கொடுத்து வருகின்றனர். தற்போது நித்தியானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். ரஞ்சிதா தொடர்ந்து அவரது சிஷ்யையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தா பற்றி குறும்படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சுவாமி நித்தியானந்தா பற்றி குறும்படம் இயக்க இருப்பது உண்மை தான். ஆனால் இதனை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளேன். அதேசமயம் நான் எப்போது வேண்டுமானாலும் இப்படத்தை இயக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது சரி தான், அதற்கு பொருத்தமானவரும் அவர் தான். நித்தியானந்தாவிற்கு கோடிக்கணக்கான சிஷ்யைகள் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment