Saturday, September 1, 2012

சேலை விளம்பரத்தில் நடிக்க வித்யாபாலனுக்கு ரூ.5 கோடி


இந்தி நடிகைகள் கரீனா கபூர், கத்ரினா கயூப், வித்யா பாலன் போன்றோர் படங்களில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். அத்துடன் விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

வித்யாபாலன் த டர்டி பிக்சர்ஸ்படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இப்படத்துக்காக பெற்றார். இதையடுத்து சம்பளம் எகிறியது. விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன.

சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு விளம்பர தூதுவராக தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்காக வித்யாபாலனுக்கு ரூ.5 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேலையை விளம்பரப்படுத்த படங்களில் நடிப்பது, பொது விழாக்களுக்கு குறிப்பிட்ட அந்த சேலையை உடுத்தி செல்வது என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார்.


No comments:

Post a Comment