நடிகை ஸ்ரேயா ஜாக்கெட் இல்லாமல் வட இந்திய பத்திரிகையொன்றுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பெண்கள் இயக்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் ஸ்ரேயாவை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
முதலில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கவில்லை என்று ஸ்ரேயா விளக்கம் அளித்தார். 'மார்பிங்' செய்து அப்படத்தை வெளியிட்டுவிட்டதாக கூறினார். ஆனால் தற்போது ஜாக்கெட் இல்லாமல் போஸ் கொடுத்து வெளியான படங்கள் தன்னுடையதுதான் என்று பல்டி அடித்து உள்ளார். எனக்கு பிடித்ததால் அவ்வாறு 'போஸ்' கொடுத்தேன். அப்படங்களில் ஆபாசம் இல்லை என்றும் கூறினார்.
இதையடுத்து ஸ்ரேயாவுக்கு மேலும் எதிர்ப்பு வலுத்தது. போனிலும், நேரிலும் பலர் கண்டித்தனர். எதிர்ப்புக்கு ஸ்ரேயா தனது டுவிட்டரில் அளித்துள்ள பதிலில் தென் இந்திய நடிகைகளில் நான் மட்டும்தான் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது போல் எதிர்ப்பு காட்டுகிறார்கள். எனக்கு முன்பே திரிஷாவும், சமீரா ரெட்டியும் இதுபோல் போஸ் கொடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
தன்னை வம்புக்கு இழுத்த ஸ்ரேயா மீது திரிஷா எரிச்சலாகி உள்ளார்.
No comments:
Post a Comment