மதுரை கோட்டாட்சியரும், மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியுமான சுகுமாறன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் மதுரை கோட்டாட்சியராகவும், கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாகவும் இருந்து வருகிறேன். இந்த தொகுதியில் நேர்மையாக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நினைத்து இருந்த என்னை மதுரை கலெக்டர் சகாயம் கடந்த 3 நாட்களாக என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் நேரில் அழைத்தும் பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சகாயம் என்னை வற்புறுத்தினார்.
ஆனால் நான் அவரிடம் தேர்தல் விதிமுறையை மீறாத அவர்களிடம் எப்படி வழக்கு போட முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் பொய் வழக்காவது போடுங்கள் என்று என்னை வற்புறுத்தினார். இதனால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளேன். கடந்த 3 நாட்களாக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு நெஞ்சுவலியும் வந்து விட்டது.தொடர்ந்து இதேநிலை நீடித்தால் நான் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக நான் பணி செய்ய விரும்பவில்லை. என்னை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் சுகுமாறன் கூறியுள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் அதிகாரி சுகுமாறன் நெஞ்சுவலி காரணமாக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சுகுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மதுரை கலெக்டர் சகாயம் நேர்மையாக தேர்தல் பணி செய்ய விடாமல் என்னை டார்ச்சர் செய்து வருகிறார். மு.க. அழகிரியை சந்தித்தீர்களா? மூர்த்தியுடன் என்ன பேசினீர்கள் என்று கேட்கிறார். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்தது முதல் நான் அழகிரியை சந்திக்கவில்லை.
மூர்த்தியை வேட்பு மனு தாக்கலின் போதுதான் அதிகாரி என்ற முறையில் மனுவை பெற்றுக் கொண்டேன். ஆனால் இவர்களுக்கு எதிராக செயல்படும்படி வற்புறுத்துகிறார். அவர் சொல்லும்படி நடக்கா விட்டால் தலைமை தேர்தல் கமிஷனிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுகிறார். இதனால் நான் தற்கொலை செய்ய தூண்டப்பட்டு உள்ளேன்.
எனக்கு ஏதாவது ஏற்பட்டு என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற பயம் வந்துள்ளது. எனவே கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை கலெக்டர் மீது தேர்தல் அதிகாரியே புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய பதிவுகள்...
- சத்தம் போட்டால் பேசமாட்டேன் : அதிமுக தொண்டர்களிடம்...
- நள்ளிரவில் ரஹ்மான் வீட்டுக்குள் புகுந்த பீஹார் இளை...
- உலகக் கோப்பையை வென்றது இந்தியா! - கோடிக்கணக்கான ரச...
- காங்கிரசை தண்டிக்க வேண்டும்: பழ. நெடுமாறன்
- 'ஸ்ருதிக்கும் உங்களுக்கும் லவ்வாமேன்னு கேட்க வேண்ட...
- உலக கோப்பை கிரிக்கெட் ரஜினி குடும்பத்தோடு கண்டுகளி...
- தமிழக அரசியலில் பரபரப்பு அதிமுகவுக்கு ரஜினி ரசிகர்...
- கேப்டன் வேட்பாளரை அடிக்க வில்லை:பிரேமலதா
- வடிவேலுவிடம் இருந்திருந்தால் செத்திருப்பேன் : சிங்...
- மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தினார் யுவராஜ் சிங்! தட...
- கருத்து கணிப்புகளை பார்த்த கருணாநிதிக்கு தோல்வி பய...
- முடிகிறது உலகக் கோப்பை... அடுத்தடுத்து அணிவகுக்கும...
- என்ன பேசினாலும் என் புகழை அழிக்க முடியாது: விஜயகாந...
- கலைஞருக்கு புகழாரம் செய்துள்ளார் ஜெ.: கார்த்தி
- சினிமாவில் வேண்டுமானால் விஜயகாந்த் முதல்- அமைச்சரா...
- கவுன்சிலர் தேர்தலுக்கு தங்கபாலு நிற்கலாம்: எஸ்.வி....
- விஜயகாந்த் முதல் சிங்கமுத்துவரை: குஷ்பு பேட்டி
- விஜயகாந்த் தோற்பது உறுதி: மு.க.அழகிரி
- ராஜபக்சேக்கு மும்பை விமான நிலையத்தில் கறுப்பு கொடி...
- கூட்டணியை விஜயகாந்த் விரும்பவில்லை: வடிவேலு
- தொகுதி உடன்பாட்டுக்கு மட்டும்தான் கூட்டணி: மா.கம்ய...
- விஜயகாந்த்தால் தேர்தல் கணிப்புகள் பொய்யாகும்-பாஜக
No comments:
Post a Comment