Wednesday, December 24, 2014

ரசிகர்களுக்கு அஜித்தின் புத்தாண்டு பரிசு

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள படம் ‘ என்னை அறிந்தால்’. 

படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டில் இருக்கும் வேளையில் தற்போது படத்தின் அமெரிக்க மற்றும் கேரளா விற்பனை குறித்த தகவலும், இசை வெளியீடு குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.

படத்தின் அமெரிக்க ரிலீஸை அட்மஸ் நிறுவனம் பெற்றுள்ளது, அதேபோல் கேரளா உரிமத்தை எம்.ஜி. நாயர் பெற்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

படத்தின் இசை டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புத்தாண்டு சிறப்பாக வெளியாகும் எனவும், தற்போது அதற்குறிய வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 


No comments:

Post a Comment