முந்திரிப் பருப்பைத் திருடியே பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ளார் ஒரு அரசியல் பிரமுகர் பெரும் பமக்காரராகியுள்ளார்.
அது மட்டுமா இவர் திருடாத பொருளே இல்லை. எதையும் விடாமல் தொடர்ந்து திருடி பெரும் கோடீஸ்வரராக மாறியுள்ள அந்த பிரமுகர் காவல்துறையினரையே அதிசயிக்க வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் எழிலரசன் (31). இவர் கடந்த நவம்பர் மாதம் உயர்ரக முந்திரி அடங்கிய 750 பெட்டிகளை கத்தார் நாட்டிற்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்வதற்காக கண்டெய்னர் லாரியில் அனுப்பினார்.
ஆனால் லாரி டிரைவர் புழல் ஜெபஜெனில் (28) என்பவர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லாமல் செங்குன்றத்தை அடுத்த தீத்தங்கரைப்பட்டு இரும்பு வியாபாரி முருகன் குடோனுக்கு கொண்டு சென்றார்.
அங்கு சீலை உடைத்து கண்டெய்னரில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 2,440 கிலோ கொண்ட 122 முந்திரி பெட்டிகளை திருடி மீண்டும் சீல் வைத்து கப்பலில் அனுப்பி வைத்துவிட்டார். கத்தார் நாட்டிற்கு கண்டெய்னர் சென்றதும் 122 பெட்டிகள் திருடப்பட்டது தெரிந்து, எழிலரசன் மாதவரம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து முருகன், ஜெபஜெனில் மற்றும் சேகர் ஆகிய 3 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார். இதில் முருகன் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் முருகன். பிழைப்பு தேடி சென்னை வந்தார். செங்குன்றம் அருகே குடியேறினார். பழைய இரும்புக் கடை வியாபாரத்தைத் தொடங்கினார். இதை பின்னர் சைடாக மாற்றி விட்டு திருட்டை மெயினாக மாற்றினார் முருகன்.
கண்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றிச்செல்லப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவைகளை ஏற்றிச்செல்லும் லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோரை கைக்குள் போட்டுக்கொண்டு இரவு நேரங்களில் தனது கடைக்கு கொண்டுவந்து அவற்றை திருடி விற்று அசுர வேகத்தில் பணம் சம்பாதிக்க தொடங்கினார். விரைவிலேயே பல கோடிகளுக்கு அதிபதியானார்.
தனது பணபலத்தால் தேமுதிகவில் புழல் ஒன்றிய செயலாளராக ஆனார். திருட்டால் பெரும் பிரபலம் அடைந்த முருகன், பின்னர் செங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் 3 குடோன்களை வாங்கினார்.
இந்த குடோன்களில் திருட்டுப் பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கு போலீசார் சோதனையிட்டபோது, 120 மூட்டை அரிசி, 1 டன் அலுமினியம் மற்றும் பல டன் இரும்புகளை கண்டுபிடித்தனர்.
திருட்டு தொழிலுக்கு தனது மகன் முத்து, மருமகன் முத்துமணி ஆகியோரையும் துணையாக சேர்த்துக்கொண்டார். முந்திரி பருப்பு திருட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இப்படித்தான் ஆவின் பாலில் கலப்படம் செய்து பெரும் ஊழல் செய்து கோடீஸ்வரர் ஆனார் அதிமுகவின் வைத்தியநாதன்.
அதே பாணியில் முந்திரி்ப் பருப்பு திருடி விற்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார் தேமுதிகவின் முருகன்.

No comments:
Post a Comment