ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக, அவரை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மா அறிவித்து இருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை பா.ஜனதா கட்சி ஆதரித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி, நேற்று புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் பேட்டியளித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, பிரணாப் முகர்ஜி வெற்றியை எதிர்த்து சங்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மதிக்கிறோம். அவருடைய வெற்றிக்கு எதிராக சங்மா வழக்கு தொடர்ந்தால் அது அவருடைய தனிப்பட்ட நடவடிக்கையாகும். அதற்கும், பா.ஜனதா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment