நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டரை, உடன் பணிபுரிந்த ஏட்டு கத்தியால் குத்தி கொலை செய்தார்.
சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் இசக்கி. இவர் இன்று மாலை தனது அறையில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த சண்முகராஜா, அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தனக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டதற்கு இசக்கிதான் காரணம் என்று கருதி சண்முகராஜா தகராறு செய்ததாகவும், தகராறு முற்றிய நிலையில் இசக்கியை அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
No comments:
Post a Comment