விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, December 1, 2014

    பாஜகவின் பிடியில் ஜெயலலிதா !!

    18 ஆண்டுகளாக நடைபெற்ற வருமான வரி ஏய்ப்பு வழக்கில், திடீரென ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை முன் வந்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

    இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும் வருமான வரித் துறை 1996, 1997-ஆம் ஆண்டுகளில் வழக்குத் தொடர்ந்தது.

    இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எழும்பூர் சென்னை பெருநகரக் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வழக்கில் சமரசம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். பின்னர், அந்த மனுவை ஏற்றுக்கொண்டு வரி செலுத்தாத காலத்துக்கு அபராதத் தொகை செலுத்துமாறு வருமான வரித் துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 27ம்தேதி ரூ.2 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளது ஜெயலலிதா தரப்பு.

    வருமானவரித் துறையின் சென்னை வட்டார துணை ஆணையர் விஜயகுமார், ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    வருமான வரித்துறையில் நீங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை, அது தொடர்பாக விசாரிக்கும் அதிகாரிகள் கொண்ட குழு விசாரித்து கடந்த 26ம்தேதி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, வருமானவரித்துறை சட்டம் பிரிவு 279(2) அதன் அடிப்படையில் நீங்கள் கீழ்கண்ட தொகையை செலுத்த வேண்டும்.

    அதாவது வரி தாக்கல் செய்யாத தொகை ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 637, அரசு தரப்பு வழக்கு விசாரணை செலவுக்காக ரூ.50 ஆயிரம், வழக்கு விசாரணைக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.22 லட்சத்து 81 ஆயிரத்து 250 ஆக மொத்தம் ரூ.30 லட்சத்து 83 ஆயிரத்து 887 தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.30 லட்சத்து 83 ஆயிரத்து 887 ஆகும். அதேபோன்று சசிகலாவுக்கு ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 972 , சசி எண்டர் பிரைசஸ் தொடர்பாக 2 வழக்குகளில் ஒரு வழக்கில் ரூ.65 லட்சத்து 67 ஆயிரத்து 872, இன்னொரு வழக்கில் ரூ.75 லட்சத்து 33 ஆயிரத்து 330 அபராதம் விதிக்கப்பட்டது. வரி மற்றும் தண்ட தொகை சேர்த்து மொத்தம் சுமார் ரூ.2 கோடி விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அனைத்தையும் வருமான வரித்துறையிடம் ஏற்கனவே கட்டிவிட்டதாக அதிமுக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 18 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று, அதற்காக நீதிமன்றங்களும், அரசும், வழக்கறிஞர்களும் பல மணி நேரம் செலவிட்ட பிறகு, எடுத்திருக்கும் இந்த முடிவினை ஜெயலலிதா தரப்பினர் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து, அப்போது துறை மூலமாகப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயற்சித்திருந்தால் நீதிமன்றங்களின் பொன்னான நேரம் மிச்சப்பட்டிருக்கும். இந்தப் பிரச்சினை தொடர்பாக தே.மு.தி.க. தலைவர், விஜயகாந்த் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

    அந்த கடிதத்தில் "இந்த வழக்கு நடைபெறும் 18 ஆண்டுகளில், நீதிபதி பலமுறை உத்தரவிட்டும், ஒரு முறை கூட ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை என்றும், 30-6-2014 அன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் சராசரி இந்தியக் குடிமகன் இதுபோன்று செயல்பட்டிருக்க முடியுமா என்றும், அதற்கு சட்டமும் நீதிமன்றமும் இடம் கொடுக்குமா என்றும், இந்த நிலையில் ஜெயலலிதா வருமான வரித் துறையின் இயக்குனர் ஜெனரலிடம் கம்பவுண்டிங் முறையில் வருமான வரி பாக்கியைச் செலுத்தி சமரசமாக தீர்த்துக் கொள்ளத் தயார் என்று அறிவித்திருப்பது சரிதானா என்றும், ஜெயலலிதாவின் வேண்டுகோளை வருமான வரித் துறை ஏற்றுக் கொள்ளுமேயானால், பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதா மீது நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கை அது திசை திருப்பிவிடும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள் என்றும், அதைக் கருத்திலே கொண்டு வருமான வரித் துறை ஜெயலலிதாவின் சமரசம் பற்றி முடிவெடுக்க வேண்டுமென்றும்" கூறியிருந்தார்.

    அப்படியிருந்தும் வருமான வரித்துறை திடீரென ஜெயலலிதாவிடம் அபராதம் பெற்றுக்கொண்டு, வழக்கை முடிக்க இப்போது முன்வந்துள்ளது. முன்பு இதே வருமான வரித்துறைதான் சமரசத்தை ஏற்க மறுத்தும் வந்தது. ஏற்கனவே சொத்குக்குவிப்பு வழக்கை இழுத்தடித்து அதன்பிறகு வெளியான தீர்ப்பு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நிலை வருமான வரித்துறை வழக்கிலும் நடந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று அதிமுக வட்டாரங்கள் பயப்பட்டன.

    இந்நிலையில் வருமான வரித்துறையின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசின் கீழுள்ள வருமான வரித்துறை, இதுபோன்ற ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன்பாக ஆளும் தரப்பிடம் அனுமதி கேட்காமல் இருக்காது என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. ஜெயலலிதாவுடன் சமரசமாக போகச்சொல்லி ஆளும் வட்டாரம்தான் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

     அதிமுக-பாஜக இடையே உள்ள மறைமுக உறவின் எதிரொலிப்புதான், இந்த சமரசம் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக அதிமுக தரப்பில் இருந்து பாஜக குறித்து எந்த விமர்சனமும் வராததையும் இந்த வழக்குடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜகவுக்கு எந்தவித நெருக்கடியும் தராமல் வளரவிடச் செய்ய இந்த வழக்கை, பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

    இந்த வழக்கின் மூலம் ஜெயலலிதா, பாஜகவின் பிடியில் சிக்கியிருக்கலாம் என்று கிசுகிசுக்கின்றனர் டெல்லி பக்கம்.



    Posted by விழியே பேசு... at 4:41 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ▼  December (465)
      • 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...
      • 2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்
      • இமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்
      • டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...
      • பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...
      • ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...
      • அஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்?
      • டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...
      • ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...
      • ஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்? : விக்ரம் பதில்
      • உத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி
      • நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...
      • ஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு ! - ஷங்கர் வ...
      • அண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...
      • ஆன்மிக ரூட்டில் அஜித்! வியக்கும் விவேக்
      • அனுஷ்காவின் ‘காதலும்.. முத்தமும்..’
      • நான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...
      • கமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...?
      • நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...
      • பொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை?
      • போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...
      • இலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...
      • தோனியின் மவுனமான வெற்றி! ஒரு பார்வை !!
      • மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி
      • கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!
      • அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்!
      • ' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...
      • சூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்
      • செங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...
      • அதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி!
      • இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா
      • நாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...
      • இளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...
      • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...
      • நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை? ஆர்.எஸ்.எஸ். உ...
      • ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...
      • மீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...
      • 6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...
      • வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்!
      • ஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...
      • ஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ
      • பெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...
      • மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்
      • மீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்
      • பிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...
      • நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...
      • விஜய்யோடு இணையும் சசிகுமார்
      • அஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா
      • தி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை
      • காதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்டார்
      • டோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...
      • என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!
      • ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...
      • வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு
      • எவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...
      • தனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்!
      • மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்
      • சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...
      • புத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...
      • பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
      • புத்தகங்களைத் தொடாதீர்கள்! - இயக்குநர் மிஷ்கின்
      • ஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா
      • கோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி
      • 400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா?: நிரூபித்தால் என...
      • விஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்!
      • ஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்
      • பெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...
      • மதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...
      • பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு
      • நாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை
      • நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...
      • மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...
      • ரிப்பீட் ரிவிட் இசையமைப்பாளர்கள்!
      • தனுஷுக்கு ஜோடியான சமந்தா!
      • பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...
      • 155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...
      • 'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் !'
      • பிரசாந்த் படத்தில் சிம்பு
      • ‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...
      • கிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...
      • எங்களை யாரும் பிரிக்க முடியாது! தடைகளைத் தாண்டிய க...
      • `நானே நீதிமன்றம்... நானே நீதிபதி!` - தாவூத் இப்ராகிம்
      • பா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி
      • கட்சியில் சேர ரஜினி மறுப்பு! பழிவாங்கும் பா.ஜ.க !!...
      • பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...
      • 'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...
      • கமல் டூப்புடன் விஷால்
      • சர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...
      • 'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்
      • கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!
      • ஆஸ்கர் ஆறுதல்
      • காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...
      • சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது
      • மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...
      • லிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...
      • ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்
      • கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...
      • கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
      • எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
      • 'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.