முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதி வெளிவந்துள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில், ‘கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்குவதில் எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது அவரை பெரும் சர்ச்சைக்கு ஆளாக்கியுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே கூறியதாவது:
இத்தாலிய நாட்டை சேர்ந்தவரான சோனியா காந்தியை இந்தியாவின் பிரதமராக்குவதில் ஆட்சேபனை இல்லை என கலாம் கூறியிருப்பது அவரை கேலிக்கு ஆளாக்கியுள்ளது. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் மீது அனைவரும் மரியாதை வைத்திருந்தனர். அவரது பதவி காலம் முடிவடைந்தாலும் அவர்மீதான மதிப்பும் மரியாதையும் குறையாமல் இருந்தது.
மேலும், கலாமின் அனுமதி கிடைக்காததால்தான் சோனியா பிரதமராகவில்லை என மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவரது புத்தகத்தில் இதுகுறித்து அவர் எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பத்து வருடங்களாக அவர் இதனை வெளியிடாதது அவர் சுயநலமிக்கவர் மற்றும் போலி வேஷக்காரர் என்பதை காட்டுகிறது என கூறியுள்ளார்.

No comments:
Post a Comment