தமிழ்த்
திரையுலகத்தை தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர்
நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் தான். அனேகன்,
சமிதாப் என தமிழிலும் இந்தியிலும்
மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷ் நடித்த இரு
படங்கள் ரிலீஸுக்காக காத்திருப்பதோடு, முன்னணி இயக்குனர்களின் படங்களையும்
கையில் வைத்திருக்கிறார் தனுஷ்.
அதே சமயத்தில் காக்கா முட்டை, காக்கி
சட்டை, நானும் ரௌடி தான்
என பல படங்களை தயாரித்துவருகிறார்.
இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்
சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரௌடி தான்
திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது.
விஜய்சேதுபதி,
நயன்தாரா, அனிருத் என திரையுலகின்
முன்னணி கலைஞர்களின் கூட்டணியில் உருவாகவிருக்கும் நானும் ரௌடி தான்
திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும்
நானும் ரௌடி தான் திரைப்படத்தைப்
பற்றி பேசிப் பேசி இந்திய
அளவில் டிரெண்ட் செட் செய்து படத்திற்கு
இப்போதே பப்ளிசிட்டி செய்ய துவங்கிவிட்டார்கள்.
No comments:
Post a Comment