டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கஜூரி காஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஒரு ஆசாமி 2 மாதங்களாக கற்பழித்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தைக்கு தெரியவந்தது.
அவர் அந்த ஆசாமியை தனது வீட்டுக்கு நைசாக விருந்துக்கு அழைத்தார். அவரும் ஆசை, ஆசையாய் விருந்துக்கு வந்தார். அப்போது அவரை சிறுமியின் தந்தை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டார்.
பின்னர் அவரது அடிவயிற்று பகுதியை தீயிட்டுப் பொசுக்கினார். அந்த ஆசாமி வலியால் அலறித் துடித்தபோது, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அதைத் தொடர்ந்து அவர் நேராக பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.
தனது மகளுக்கு நேரிட்ட அநீதிக்காக, அந்த ஆசாமியை எப்படி சித்ரவதை செய்து, கொலை செய்தார் என்பது குறித்து போலீசில் அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில்:
‘‘என் மகளை பலாத்காரம் செய்தவனைப்பற்றி போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை. அப்படி செய்தால், அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் என் மகளுக்கு இந்த பலாத்காரத்தில் தொடர்பு இருப்பதாக கதை கட்டி விடுவார்கள். எனவேதான் அந்த ஆசாமிக்கு நானே தண்டனை கொடுக்க முடிவு செய்தேன்’’ என்றார்.

No comments:
Post a Comment