பாண்டியநாடு,
நான் சிகப்பு மனிதன் என
2 படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த லட்சுமி
மேனன். நா.சி.ம
படத்தில் விஷாலுக்கு லிப் டு லிப்
முத்தம் தந்து நடித்ததும் இருவருக்கும்
காதல் என்றும் கோலிவுட் பரபரத்தது.
அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க
உள்ளார் விஷால். இதிலும் லட்சுமி
மேனனையே ஜோடியாக்க பிளான் நடந்தது.
இப்படியே தொடர்ச்சியாக ஜோடி போட்டால் இண்டஸ்ட்ரிகாரங்க
பேசறது உண்மையாயிடும்னு சுசீ எண்ணுகிறார், மேலும்
விஷாலுக்கு சிலர் அட்வைஸ் தந்தனர்.
வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்க
இருவருக்குமே இஷ்டமில்லையாம். இதனால் லட்சுமி மேனனுக்கு
பதில் காஜல் அகர்வாலை ஜோடி
சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
விஷால்
படத்தை இயக்க உள்ளதாக சுசீந்திரன்
அறிவித்ததிலிருந்து லட்சுமி மேனன்தான் ஹீரோயின்
என்று கூறப்பட்டு வந்தது. இப்போது அவருக்கு
பதிலாக காஜலிடம் பேசி உள்ளனர். விஷால்
தற்போது 'ஆம்பள' படப்பிடிப்பில் இருப்பதால்
வரும் பிப்ரவரியில்தான் இப்படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. காஜல் இப்படத்தில் நடிப்பதற்கு
சம்மதம் தெரிவித்திருந்தாலும் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்துபோட்டு
உறுதி செய்யவில்லையாம்.
No comments:
Post a Comment