சட்டசபை தேர்தலில், "தி.மு.க., கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது' என, உளவுத்துறையினர் அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால், பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களை, "குதிரை பேரம்' நடத்தி விலைக்கு வாங்க ஆளுங்கட்சி தரப்பு திட்டமிட்டுள்ளது என்ற தகவல், அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபைக்கான ஓட்டுப்பதிவுக்கு முன்னும், பின்னும் இருந்த சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து உளவுத்துறை போலீசார் அறிக்கை ஒன்றை தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளனர். அதில், "தி.மு.க., கூட்டணிக்கு, 95 இடங்கள் மட்டுமே கிடைக்கும்' என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆகையால், ஆட்சியை பிடிக்க, கூடுதலாக தி.மு.க.,வுக்கு தேவைப்படும், 23 எம்.எல்.ஏ.,க்களை, எப்படியாவது எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து கழட்டி வந்துவிடவேண்டும் என்று, ஆளுங்கட்சி தரப்பு, இப்போதே திட்டமிட்டு காய் நகர்த்த துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின், எம்.எல்.ஏ.,வாக தேர்வானவரையோ, கட்சிகளையோ அணுகுவது கடினமான விஷயம் என்பதால், ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட கால அவகாசத்தில், வெற்றி வாய்ப்புள்ளவர்களை, தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில், எந்த கட்சியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனாலும், அவர் கண்டிப்பாக பல கோடிகளை தண்ணீராக இறைத்து தான் வெற்றி பெற்றவராக இருப்பார். ஆகையால், ஆட்சியை பிடிக்க, தமிழகத்தில் நடக்கவுள்ள, "குதிரை பேரத்தில்' எம்.எல்.ஏ.,க்களுக்கு கோடிக்கணக்கில் வாரி கொடுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா "தி.மு.க., தமிழக சட்டசபை தேர்தலில், 5,000 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது' என, வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சூழலில் தான், தமிழகத்தில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படுபவர்களின் விலை, 50 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த, "குதிரை பேரத்தை' நடத்தி, மீண்டும் ஆளுங்கட்சியாக தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க., கூட்டணிக்கு, 95 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று உளவுத்துறை கூறும் போது, அதிகபட்சம் 139 தொகுதிகள், அ.தி.மு.க., கூட்டணி வசம் இருக்கும். இதில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்களையும், குட்டி கட்சி களையும் மொத்தமாக வளைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால், கூட்டணியில் அவர்களை தவிர்த்து, மற்ற கட்சியினரையும் வளைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் இவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது, "கட்சி தாவல் தடை சட்டம் தான்!' கடைசி கட்டமாக, அ.தி.மு.க., - தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் வளைக்கப்படலாம். யார் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிபெரும்பான்மை கட்சியாக வருகின்றனறோ, யார் அதிக விலை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு மறைமுக ஆதரவு தரதிட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது பற்றி உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.மு.க., கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை. ஆகையால், ஆட்சியை தக்க வைக்க, வெற்றி பெற்று, எம்.எம்.ஏ.,வாக பதவிக்கு வருபவர்களை, குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்குவது என, தி.மு.க., தீர்மானித்துள்ளது. இதற்கான, "ஐடியா'வே சில உளவுத்துறை உயரதிகாரிகள் தான் கொடுத்துள்ளனர். மேலும், யார் வலையில் சிக்குவர், எப்படி சிக்க வைப்பது, அவர்கள் மீதுள்ள வழக்குகள் என்ன என்பன பற்றி துருவும் உளவுத்துறை அதிகாரிகள், அவற்றை பகடைக்காயாக கொண்டு வளைக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி தான் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளை அணுகுவதற்கான பணிகளை ஆளுங்கட்சி துவக்கியுள்ளது. எது எப்படியிருந்தாலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக ஜெயிப்பவர்களின் விலை குறைந்தபட்சம், 50 கோடி ரூபாயாக இருக்கும் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்தில்லை.
இன்றைய செய்திகள்...
- அவன் இவனை அபகரித்த சன் டிவி!
- "49 ஓ'வுக்கு நல்ல வரவேற்பு
- ஹீரோயின் ஓகே..! ஹீரோ நோ நோ..!
- ஐ.நா. சபை சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது :இல...
- கவர்ச்சியில் இருந்து காமெடிக்கு....
- மறுபடியும் வருவேன் - தமன்னா உருக்கம்
- கொலைமிரட்டல் எதிரொலி அதிமுக வேட்பாளருக்கு துப்பாக்...
- திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர்
- மீன்பிடிக்க தடை: 45 நாட்கள் மீனவர்கள் படும் பாடு-வ...
- மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொட...
- தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்-ஜெய...
- பணம் பட்டுவாடா-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்...
- தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
- மின்சார நாற்காலி தண்டனையையும் மகிழ்சியாக ஏற்றுக்...
- சீமான் கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார் தங்கபாலு : ...
- ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேக...
- இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி
- இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள்... ஐ.நா. நிபு...
- எம்.எல்.ஏ., விலை ரூ.50 கோடி: குதிரை பேரத்திற்கு தி...

No comments:
Post a Comment