சமீபத்தில் சென்னை ‘சத்யம்’ தியேட்டரில் நடைபெற்ற ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டுவிட்டு, சென்னை - ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை பகுதியில் தனது விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார் இயக்குநர் விஜய்.
அப்போது அங்கு சாலை ஓரத்தில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸார் அவரது காரைக் கையைக் காட்டி நிறுத்தி, காரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் கறுப்பி பிலிம் ரோல்களை அகற்றாமல் இருந்தமைக்காக அபராதம் கட்டச் சொன்னார்கள்.
பதிலுக்கு விஜய், நான் ‘கிரீடம்’, ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’ படங்களை இயக்கிய இயக்கியவர் என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, அபராதத் தொகையை கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்றாராம் விஜய்.
No comments:
Post a Comment