ஆந்திராவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களின் போட்டியிடவுள்ள ஜெகன்மோகன்ரெட்டி, அவரது தாயார் விஜயலெட்சுமி ஆகியோரை தோற்கடிக்க ஆளும் காங்கிரஸ் கட்சி புதிய வியூகத்தினை வகுத்துள்ளது. அதன்படி, ஜெகன்மோகன்ரெட்டி போட்டியிடும் கடப்பா பார்லிமென்ட் லோக்சபா தொகுதியில், அவரது பெயரிலேயே மொத்தம் ஜெகன்மோகன்ரெட்டியிபெயரில் 12 சுயேட்சைகளை களம் இறக்கியுள்ளது. அதே போன்று விஜயலெட்சுமி பெயரில் புலிவெந்துலா சட்டமன்ற தொகுதியில், 4 விஜயலெட்சு பெயரில் சுயேட்சைகளை களம் இறக்கியுள்ளதாக , ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் அம்பாதிராம்பாபு, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், கடப்பா லோக்சபா தொகுதி, மற்றும் புலிவெந்துலா சட்டமன்ற தொகுதியில் வரும் மே.8-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் எங்கள் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை வீழ்த்த ஆளும் காங்கிரஸ் புது யுக்தியை கையாண்டுள்ளது. ஜெகன்மோகன்ரெட்டி என்ற பெயரில் 12 சுயேட்சைகளை நிறுத்தி குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. எனினும் இன்ஷியலை வைத்து ஜெகன்மோகன் ரெட்டி பெயரை பொதுமக்கள் அடையாளர் காண்பர். அதே போன்று புலிவெந்துலா தொகுதியிலும் விஜயலெட்சுமி பெயரில் 4 சுயேட்சைகளை நிறுத்தி காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது. எப்படியிருந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியே வெற்றி பெறுவார்.என்றார்
இன்றைய செய்திகள்...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment