விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Monday, April 18, 2011

    எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? - பதறும் பிரசார ஸ்டார்கள்



    கொள்கைக் கோட்பாடுகளை அடுக்கி, நல்லாட்சிக்கு உத்தரவாதம் தந்து, மக்கள் மனதில் நம்பிக்கை வைட்டமின் ஏற்றி, ஆட்சி அமைக்க முயற்சித்த காலம் மலையேறிவிட்டது. இலவச இனிமா, கவர்ச்சி சினிமா, கவருக்குள் 'மணி’மா என்ற ஒற்றைக் கொள்கையைச் சகல கட்சிகளும் கடைப்பிடிக்கும் காலம் இது. அதிலும் எந்தப் பொது நல நோக்கும் இல்லாமல், தனிப்பட்ட விரோதம் தீர்க்கும் தனி மனித விமர்சனங்கள் இந்தத் தேர்தலில் அதன் உச்சத்தை எட்டியது.

    இதில், தேர்தல் சமயம் மட்டும் அரசியல் கால்ஷீட் கொடுத்து, ஆவேசம் காட்டுவது கோடம்பாக்க நட்சத்திரங்களின் பழக்கம். இந்தத் தேர்தலில் அப்படி சபைக்கு வந்து வெளுத்துக் கட்டியவர்களுள் முக்கியமானவர்கள் விஜய், வடிவேலு, சரத்குமார் மற்றும் குஷ்பு. பிரசார அனல் அடங்கியதும் மீண்டும் இவர்கள் கோடம்பாக்கத்தில்தான் நிலை கொள்ள வேண்டும். ஒருவேளை இவர்கள் சார்ந்த கட்சி, ஆட்சிக் கட்டிலை எட்ட முடியாவிட்டால், இவர்களின் எதிர்காலம் என்ன? 'எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி, யாருக்கெல்லாம் ஆப்பு?’ என்று சோழி உருட்டி, கணிப்பு வேட்டை நடத்திக்கொண்டு இருக்கிறது கோலிவுட். 'அப்படி என்னதான் நடக்கும்?’ என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம்...
    தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. மீது வெளிப்படையாக வெறுப்பு காட்டினார், அ.தி.மு.க சார்பாக தேர்தலில் போட்டியிடுவார் என்று ஹேஷ்யங்கள், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசா ரம் மேற்கொள்வார் என்று விஜய்யை மையமாக வைத்து, முன் எப்போதைக் காட்டிலும் அதிக அரசியல் அனல். ஆனால், வாக்குப் பதிவு நெருக்கத்தில், 'இனி, விஜய் அரசியலில் ஈடுபட மாட்டார்!’ என்று அதிரடியாக பேக் அடித்தார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.

    தடாலடியாக, விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலனை அலேக் செய்தது தி.மு.க. ''என்னதான் நடக்குது விஜய்யைச் சுற்றி?'' என்று ஜெயசீலனிடம் கேட்டதும்  கொந்தளித்துவிட்டார். ''கடந்த 15 வருஷமா விஜய் ரசிகர் மன்றப் பொறுப்புல இருந்தேன். 3 ஆயிரம் மன்றங்களை இத்தனை வருஷத்துல 40 ஆயிரம் மன்றங் களா ஆக்கி இருக்கோம். கூண்டுக் கிளியா இருந்த விஜய்யை மக்கள் மன்றம் அமைப்பு மூலமா, பொது மேடைக்கு அழைச்சுட்டு வந்ததே எங்களைப்போன்ற ரசிகர்களின் உறுதிதான். ஆனா, இன்னிக்கு அவரோட ஒரு படத்தை ரிலீஸ் பண்றதில் சிக்கல் உண்டாகவும், சுய நலத்துக்காக தனித்தன்மையை விட்டுட்டு அ.தி.மு.க. பக்கம் ஒதுங்கிட்டார். இதுக்காகவா ராத்திரி பகலா நாங்க கஷ்டப்பட்டோம்!

    முதல்ல, 'விஜய் மக்கள் இயக்கம்’னு ஓர் அமைப்பு இல்லவே இல்லை. அது ஜெயலலிதாவை ஏமாத்தப் போட்ட ஒரு நாடகம். திடீர்னு ஒருநாள், தமிழகம் முழுக்க 32 மாவட்டத் தலைவர்களை சென்னைக்கு அழைத்தார், எஸ்.ஏ.சந்திர சேகரன். 'தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுக்கலாம்?’னு கூட்டத்தில் கேட்டவர், எங்க கருத்துக்களைக் காதில் போட்டுக் காம, 'நீங்க எல்லாரும் தி.மு.க-வுக்கு எதிரா வேலை பார்க்கணும். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா இருப்பதா விஜய்கிட்டே சொல் லுங்க. அப்பதான் அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுப்பார்’னு அவரோட சொந்த விருப்பத்தை எங்க மேல திணிச்சார். அ.தி.மு.க-வுக்கு ஆதரவா செயல்பட அங்கே இருந்த 27 மாவட்டத் தலைவர்களுக்குப் பிடிக்கலை. இதை விஜய்கிட்ட நேர்லயே சொன்னோம். 'அதுபத்தி எனக்கு எதுவும் தெரியாது. எல்லாத்தையும் அப்பாகிட்ட பேசிக்குங்க’ன்னு சொல்லி நழுவிட்டார் விஜய்.
    நிச்சயம் கலைஞர்தான் முதல்வர் ஆவார். அப்போ, விஜய்யும் அவர் அப்பாவும் அடிக்கிற அந்தர் பல்டியைப் பார்க்கத்தானே போறோம்!''


    ''ஜெயா டி.வி 'ஜாக்பாட்’ நிகழ்ச்சி மூலமா தமிழகப் பெண்கள் மத்தியில் குஷ்பு வளர்த்துக்கொண்ட புகழை தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்து அறுவடை செய்துகொண்டார். 'எனக்கு அரசியலில் பிடித்த பெண் ஜெயலலிதா’ன்னு முன்னாடி சொன்னவங்க, இப்போ அவங்களை எதிர்த்து அரசியல் செய்யுற அளவுக்கு வளர்ந்துட்டாங்களா? குஷ்புவுக்கு எப்படி திராவிடப் பாரம்பர்யம் பத்தித் தெரியாதோ... அப்படித்தான் தி.மு.க பாரம்பர்யமும் தெரியாது!'' என்று மர்மப் புன்னகை பூக்கிறார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி.
    '
    'நான் தி.மு.க-வுக்காக எத்தனையோ வருஷம் கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா, என் ஒட்டுமொத்த உழைப்பையும் உறிஞ்சிக்கொண்டு என்னை குப்பைக் காகித மாகக் கடாசியது தி.மு.க. தலைமை. எப்பவும் பழசை மறந்துவிடும் குணாதிசயம்கொண்டவர் கருணாநிதி. புதுசுக்குத்தான் மவுசு. குஷ்பு தி.மு.க-வுக்குக் கிடைச்ச புதுத் துடைப்பம். அதனால கொஞ்ச நாள் பட்டுக் குஞ்சம் கட்டி வேடிக்கை பார்த்தாங்க. இப்போ வடிவேலு என்ட்ரி கொடுத்த பிறகு குஷ்பு பழசாகிவிட்டார். 'தி.மு.க ஆளுங்க மாதிரி மோசமானவங்களை நான் பார்த்ததே இல்லை’னு கதறிக்கிட்டே குஷ்பு கட்சியைவிட்டு வெளியேறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. குஷ்பு போஸ்டரை முறத்தால் அடித்தவர்கள், அவரது வீட்டில் கழுதையைக் கொண்டுவந்து கட்டியவர்கள், அவர் முகத்துக்கு நேராத் துடைப்பத்தைத் தூக்கிக் காண்பித்தவர்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, இப்போ பிரசாரம் செய்கிறார் குஷ்பு.


    போன தடவை தி.மு.க ஜெயித்தவுடன் என் மீதும், எஸ்.எஸ்.சந்திரன் மீதும் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி. என் துறை சார்ந்தவர் என்ற நேசத்தில் சொல்றேன்...

    அம்மாவைப் பத்தி அவதூறாகப் பேசுவதை குஷ்பு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து அம்மா ஆட்சி என்பதை மறந்துடக் கூடாது!'' என்று எச்சரிக்கை தொனியில் முடிக்கிறார் ராதாரவி.
    'இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்... இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா!’ என்று சினிமாவில் வடிவேலுவுவைக் காய்ச்சி எடுத்த சிங்கமுத்து, அரசியலிலும் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து அதகளப்படுத்துகிறார்.

    ''உண்மையில் வடிவேலு வீட்லயும் அலுவலகத்திலும் கல் எறிஞ்சது தி.மு.க -தான். இதுகூடத் தெரியாம விஜயகாந்த் ஆளுங்க அடிச்சதா நம்பிட்டு, ஊர் ஊரா சுத்திட்டு இருக்கார். தி.மு.க-வின் கொள்கைக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வடிவேலு அந்தக் கட்சிக்காகப் பிரசாரம் பண்ணலை. என் மேல பொய் வழக்கு போடவும், விஜயகாந்த்கூட மல்லுக்கட்டவும் அந்தப் பக்கம் ஒதுங்கி இருக்கார். மத்தபடி தி.மு.க-வை ஜெயிக்கவைக்கிறது அவர் நோக்கமா இருக்காது. எம்.ஜி.ஆரை தி.மு.க. தூக்கி எறிஞ்சப்ப, தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தாங்கிப் பிடிச்சு அன்புக் கடலில் ஆழ்த்தினாங்க. தன்னைக் காயப்படுத்திய தி.மு.க-வை எதிர்த்து எம்.ஜி.ஆர் ஆவேசமாப் பாடிய பாடல்களை, இப்போ தி.மு.க. மேடையில வெட்கமே இல்லாமப் பாடிட்டு இருக்காரு வடிவேலு.

    மே 13-ம் தேதிக்குப் பிறகு அம்மா ஆட்சி நிச்சயம். அப்போ, இந்த மாப்புக்கு ஆப்பும் நிச்சயம். தமிழ் சினிமா சார்பா அம்மாவுக்குப் பாராட்டு விழா நடத்துனப்போ, கையெடுத்துக் கும்பிட்டு கால்ல விழாத குறையாக் கெஞ்சினவர் இந்த வடிவேலு. இப்போ மறுபடி அம்மா முதலமைச்சர் ஆனதும், 'அம்மா தாயே... நீங்கதான் பராசக்தி! என்னை மன்னிச்சுக் காப்பாத்துங்க தாயீ’ன்னு அம்மா கால்ல விழத்தான் போறார். அதையும் நாம பார்க்கத்தானே போறோம்!'' என்று சீறுகிறார்.

    தி.மு.க பாசறையில் முழங்கிக்கொண்டு இருக்கும் பாக்யராஜ், சரத்குமார் பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ''சினிமா நடிகருக்கு இமேஜ் ரொம்பவே முக்கியம். ஆனா, சரத்குமார் அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப்பட்டதாவே தெரியலை.  தி.மு.க-வில் எம்.பி., பதவி கொடுத்துக் கௌரவித்தார்கள். அந்தக் கட்சியை மதிக்காமல் ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் தி.மு.க அரசு அமைத்த திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினரா சரத்குமாரை நியமித்தார் கலைஞர். ஆனா, இவர் பாட்டுக்கு திடீர்னு அவர் சாதியினரைச் சேர்த்துக்கொண்டு 'பெருந்தலைவர் மக்கள் கட்சி’ன்னு ஆரம்பித்தார். அங்கேயாவது ஒழுங்கா இருந்தாரா?
    அந்தக் கட்சி பொறுப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல், ஒரு ராத்திரியில் தன்னிச்சையா அ.தி.மு.க-வுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டார். இப்போ, அவரோட ஒரே பலத்தையும் இழந்து நிற்கிறார். நிச்சயம் மீண்டும் கலைஞர் ஆட்சி மலரும். அப்போ, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சமாதானத் தூது விடுவார் சரத்குமார். 'ஐயா, உங்களைப்போல் ஒரு தலைவர்... முதல்வர் உலகத்துலயே இல்லை’ன்னு சரண்டராகி காக்கா பிடிப்பார் சரத்!''


    இன்றைய செய்திகள்... 



    • 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
    • பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
    • சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
    • திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
    • தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
    • பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
    • என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
    • 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
    • நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
    • தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
    • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
    • கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
    • கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
    • இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
    • 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
    • வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
    • குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
    • ஜெகன்மோகன் பெயரில் 12 ‌சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
    • ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
    • எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
    • உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
    • தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்






    Posted by விழியே பேசு... at 9:57 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ▼  April (772)
      • படமாகிறது சாய்பாபா வரலாறு
      • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
      • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
      • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
      • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
      • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
      • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
      • நண்பன் க்ளைமாக்ஸ்
      • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
      • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
      • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
      • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
      • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
      • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
      • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
      • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
      • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
      • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
      • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
      • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
      • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
      • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
      • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
      • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
      • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
      • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
      • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
      • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
      • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
      • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
      • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
      • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
      • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
      • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
      • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
      • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
      • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
      • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
      • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
      • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
      • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
      • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
      • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
      • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
      • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
      • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
      • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
      • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
      • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
      • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
      • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
      • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
      • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
      • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
      • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
      • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
      • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
      • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
      • காதலில் தோல்வி : கிரண்!
      • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
      • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
      • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
      • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
      • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
      • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
      • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
      • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
      • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
      • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
      • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
      • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
      • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
      • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
      • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
      • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
      • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
      • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
      • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
      • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
      • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
      • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
      • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
      • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
      • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
      • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
      • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
      • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
      • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
      • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
      • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
      • கைவிரித்தார் பான் கீ மூன்
      • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
      • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
      • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
      • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
      • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
      • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
      • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
      • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
      • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
      • 14 வில்லன்களுடன் மோதும் விஜய்.!
      • தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசை...
      • எவ்வளவு அடித்தாலும் வலிக்காத தி.மு.க.,: ஆர்.ரங்கரா...
      • என் மீது ஏதேனும் குற்றம் கூற விரும்பினால்...... ...
      • ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயண...
      • தங்கபாலுவை கட்சியில் இருந்து நீக்க கோரி காங்கிரசா...
      • போர்க்குற்றம் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்ப...
      • தபால் அலுவலகங்களில் தங்கத்திற்கு தங்கம் இலவசம்
      • கனிமொழியை கைது செய்ய வேண்டும்; கலைஞர் டிவியை முடக்...
      • குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர்: நாளை திமுக உ...
      • ஒப்பற்ற மகான் சாய்பாபா மீண்டும் அவதரிப்பார்! - சிர...
      • வானம் படத்திற்கு யு/ஏ சான்று
      • உள்ளாடையை வெளியில் அணிய விருப்பமில்லை - சல்மான் கி...
      • இலங்கை அரசை காப்பாற்றினால் உலக அரங்கில் இந்தியாவுக...
      • சங்கீதாவின் ஒரு நாளுக்காக காத்திருக்கும் டைரக்டர்!
      • இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்துள...
      • ஜெயலலிதா புத்தகத்திற்கு தடை
      • தனுஷுக்கு ரஜினி சிபாரிசு சந்தேகம் கிளப்பும் கோலிவுட்
      • 2ஜி: கருணாநிதி அரசை 'டிஸ்மிஸ்' செய்க!-விஜயகாந்த்
      • கொலை மிரட்டல்-சாய்பாபா உதவியாளருக்கு பாதுகாப்பு
      • ராஜபக்சேவை மன்மோகன் சிங் காப்பாற்றுவாரா?
      • இலங்கையுடனான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும...
      • நெஞ்சை உறையவைக்கும் ஐ.நாவின் அறிக்கை முழு விவரம்
      • ஈழத் தமிழர்களுக்காக இணையுங்கள் - அரசியல் கட்சிகளுக...
      • தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!
      • இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு பொய் சொன்னது : ஐ...
      • நார்வே திரைப்பட விழா: விருதுகள் அறிவிப்பு : எந்திர...
      • சபரிமலையில் மகரவிளக்கு தோன்றும் ரகசியத்தை வெளியிட்...
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.