காமெடி நடிகர் வடிவேலு தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்தார். அவர் கூட்டங்களுக்கு முன்னணி தலைவர்களுக்கு இணையாக மக்கள் திரண்டார்கள். பேச்சையும் ஆரவாரத்தோடு ரசித்தனர். பிரசாரத்தில் விஜயகாந்தையே கடுமையாக தாக்கி பேசினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எந்த கூட்டத்திலும் விமர்சித்து பேச வில்லை என்றார்.
இதுகுறித்து வடிவேலு அளித்த பேட்டி வருமாறு:-
தேர்தல் பிரசாரத்தில் எனது பேச்சை கேட்க பெரும் கூட்டம் கூடியது. மக்கள் அளித்த வரவற்பு இனிமையான அனுபவமாக இருந்தது. அது என்னை உற்சாகப்படுத்தவும் செய்தது. அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகளை நான் பொருட்படுத்தவில்லை. தேர்தலில் உறுதியாக தி.மு.க. அமோக வெற்றி பெறும். கலைஞர் மீண்டும் முதல்வர் ஆவார். எனது தேர்தல் பிரசாரம் கலைஞருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
கூட்டங்களில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லையே என்று கேட்கிறார்கள். தி.மு.க. அரசின் திட்டங்கள் பற்றி பிரசாரத்தில் பேசினாலே போதும் என முதல்வரும், துணை முதல்வரும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது பேச்சும் அதை ஒட்டியே இருந்தது. விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசுவதற்கு சில காரணங்கள் உள்ளன.
அவர் நடித்த படம் ஒன்றில் நான் காமெடி வேடம் செய்தேன். ஒரு காட்சியில் விஜயகாந்தை பார்த்து வருங்கால முதல்வர் என்று வசனம் பேச சொன்னார்கள். நான் அவ்வாறு பேச முடியாது என்று மறுத்து விட்டேன். அன்று முதல் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர்கள் யார் என்று தெரியவில்லை. முதல்- அமைச்சர் கலைஞரிடம் இந்த மிரட்டல்கள் பற்றி கூறினேன். அவர் எனது வீட்டில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு வடிவேலு கூறினார்.
இன்றைய செய்திகள்...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment