தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘49 ஓ’ என்ற விதியை பயன்படுத்தலாம். வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பட்டியல் மட் டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.
வாக்காளர்கள் ‘49 ஓ’வை பயன்படுத்த வேண்டும் என்றால் வாக்குச்சாவடி அதிகாரியிடம் சென்று கூற வேண்டும். அதற்கு அவர் ஒரு படி வத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொல்வார். பூத் அறையில் தனியாக ஒரு பதிவு நோட்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் பதிவு செய்து கையெழுத்திட்டு விட்டு செல்லலாம்.
ஆனால் வாக்காளர்கள் ‘49 ஓ’ பதிவு செய்வதற்கு மிகவும் தயங்குகின்றனர். ஏனென்றால், வாக்களிக்கும் பூத்தில் வாக்குச்சாவடி அதிகாரி, பூத் சிலிப் சரிபார்ப்பதற் காக ஒருவர், கையில் மை வைப்பதற்கு ஒருவர் மற்றும் போட்டியிடும் ஒவ் வொரு வேட்பாளர்களின் சார்பில் பூத் ஏஜென்டுகள் இருப்பார்கள். இத்தனை பேர் முன்னிலையில் தான் ‘49 ஓ’ பதிவு செய்வதற்கான பதிவேடுகளும் வைக்கப்பட்டிருக்கும்.
கட்சி பிரதிநிதிகள் அடங்கிய அனைவர் முன்னிலையில், ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்பதை வலியுறுத்த ‘49 ஓ’ பதிவு செய்ய வேண்டும் என்றால் வாக்காளர்கள் அச்சப்படாமல் இருக்க முடியாது.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது அங்கிருக்கும் பூத் ஏஜென்டுகளுக்கு நன்றாக தெரிந்து விடும். தேர்தல் முடிந்த பிறகு மிரட்டல் வரலாம்.
அதேநேரத்தில் ஓட்டுப் போட்டால் அது வெளி யில் தெரியாது. அதே போன்ற ரகசியம் காக்கப்படும் வகையில், ‘49 ஓ’ முறையும் இருக்க வேண் டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை மட்டும் வெளிப்படையாக சொல்லும் விதத்தில் நடைமுறைகள் இருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்கின்றனர்.
தேர்தல் நெறிமுறைகள் கொண்ட நடத்தை விதிகள் 1961ன் கீழ்தான் ‘49 ஓ’ முறை உள்ளது. ஆனால் இந்த முறை மறைவான வாக்களிப்பு தன்மைக்கு முரணாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய செய்திகள்...
- தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அத...
- கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக...
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...

No comments:
Post a Comment