நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி தான் ஆட்சியமைக்க வேண்டும் என்று பிரதான கட்சியனர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்த வண்ணம் உள்ளனர். அவர்கள் பிரார்த்தனை நிறஐவேறுமா என்று வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே மாதம் 13ம் தேதி தெரிந்துவிடும்.
கடந்த 13ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவு அதிகபட்சமாக 77.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
எங்கள் சாதனைகளை மதித்து, மீண்டும் எங்கள் ஆட்சி மலர தான் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்று திமுக கூட்டணியினர் ஒரு பக்கம் மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளதாக மறுபக்கம் அதிமுக கூட்டணியினர் கூறி வருகின்றனர்.
இரண்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு பூஜை, யாகம் நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை நரசிங்க பெருமாள் கோவிலுக்கு கட்சி தொண்டர்களுடன் சென்று வழிபாடு நடத்தினார். முன்னாள் அதிமுக அமைச்சர் நைனார் நாகேந்திரன் நெல்லையப்பர் கோவில், கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தினார்.
இது போல் திருச்செந்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு கோவில்களில் அந்தந்த பகுதியில் உள்ள கட்சி வேட்பாளர்களும் முக்கிய பிரமுகர்களும் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு செய்தனர். இரண்டு கூட்டணிக் கட்சியினருடம் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானிடம் கோரிக்கை வைத்துவிட்டு வந்துள்ளனர்.
தொண்டர்களும் தொடர்ந்து கோவில் படிகளில் ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள். இரண்டு கூட்டணிகளுமே ஆட்சியைப் பிடிப்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றன. இதனால் அந்த இரண்டு கூட்டணிகளைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் தற்போதே தங்களுக்கு முக்கிய இலாகாவுடனான அமைச்சர் பதவி கிடைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர வாரிய தலைவர், பப்ளிக் பிராசிகியூட்டர் போன்ற பதவிகளை பெறுவதற்கும் முக்கிய கட்சிகளை சேர்ந்த சிலர் இப்போதே களம் இறங்கி விட்டதாக தெரிகிறது. மே மாதம் 13-ம் தேதி இவர்கள் கனவு கோட்டையின் பலம் தெரியும்
இன்றைய செய்திகள்...
- தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அத...
- கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக...
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...

No comments:
Post a Comment