புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா உயிருடன் சமாதி ஆகப் போவதாக தகவல் பரவியதால் பக்தர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். ஆனால் இந்த தகவல் உண்மையில்லை, பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என பிரசாந்தி நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டவர் ஸ்ரீசத்ய சாய்பாபா. ஆன்மீக குருவாகத் திகழும் இவர், பல்வேறு அரிய செயல்களை நிகழ்த்திக் காட்டியவர். இவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.
புட்டபர்த்தி என்ற வறண்ட குக்கிராமத்தை, இன்று உலகம் முழுக்க தெரியும் நகரமாக மாற்றிய பெருமை சாய்பாபாவுக்கே உண்டு. அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றை ஒன்றுமில்லாமல் செய்தது, அவர் ஆற்றிவரும் சமூகப் பணிகள்.
சுகாதாரம், குடிநீர், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு துறைகளில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு உதவிகளைச் செய்தவர் சாய்பாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு அவர் தந்த உதவி மிகப் பெரியது. அந்தக் கால்வாய் முழுவதையும் சீரமைக்க ஆகும் செலவை பாபா ஏற்றார்.
சென்னையை நாறடிக்கும் கூவத்தைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை ஏற்கவும் அவர் முன்வந்தார்.
இந்த நிலையில், சாய்பாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதயக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக புட்ட பர்த்தியில் உள்ள சத்யசாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவருக்கு சீறுநீரக கோளாறும் ஏற்பட்டதால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள். 24 மணி நேரமும் டாக்டர்கள் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.
சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து உறுப்புகளும் எந்திரம் மூலம் இயங்க வைக்கப்படுகின்றன. செயற்கை சுவாசம்தாந் அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாய்பாபா உடல்நிலை சீராக இருப்பதாகவும் என்றாலும் கவலைக்கிடமான நிலையிலேயே அவர் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே சாய்பாபா ஜீவசமாதி (உயிருடன் மண்ணில் புதைத்தல்) அடையப் போவதாக தகவல் பரவியது. சாய் சேவா தள உறுப்பினர் ஒருவர் உள்ளூர் தொலைக் காட்சிக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். சாய்பாபா ஜீவசமாதி அடைய இருப்பதாகவும், இதுபற்றி சாய் டிரஸ்ட் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
பக்தர்கள் கண்ணீர்...
இது புட்டபர்த்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாய்பாபா சீடர்களும், ஏராளமான பக்தர்களும் ஆஸ்பத்திரி முன் திரண்டனர். தெருக்களில் சாய்பாபா படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர். ஆனால் இது வெறும் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சாய் டிரஸ்ட்டின் தலைமை அலுவலகமான பிரசாந்தி நிலையம் அறிவித்தது. ஆந்திர அரசு அதிகாரிகளும் இந்த தகவலை மறுத்தனர். சாய்பாபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்து வேறுபாடு
இதற்கிடையே சாய் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரும் சாய்பாபாவின் சகோதரர் மகனுமான ரத்னாகருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகின்றனர்.
சாய்பாபா ஜீவ சமாதி அடையப் போவதாக வெளியான செய்திகூட, ரத்னாகர் கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய செய்திகள்...
- தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அத...
- கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக...
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...

No comments:
Post a Comment