மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமியை போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை அருகே உள்ள அப்பன்திருப்பதி போலீஸ் நிலையத்தில் வைத்து பி.ஆர்.பழனிச்சாமியிடம் கிரானைட் முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. முதல் நாள் விசாரணையில் பல்வேறு கேள்விகளுக்கு "தெரியாது'' என்று பதில் அளித்த பி.ஆர்.பழனிச்சாமி நேற்றைய விசாரணையில் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
கிரானைட் ஏற்றுமதி மற்றும் கலால் வரித்துறை, வங்கி கணக்குகள், கிரானைட் சாராத மற்ற தொழில்கள் தொடர்பாக போலீசார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை பழனிச்சாமியிடம் கேட்டனர். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு சட்டவிதிகளுக்கு உட்பட்டே தொழில் செய்ததாக பழனிச்சாமி வாக்குமூலம் அளித்தார்.
மேலும் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான கேள்விகளுக்கு பழனிச்சாமி நேரடியாக பதில் அளிக்கவில்லை. கிரானைட் முறைகேடுகளுக்கு உதவிய அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் குறித்து போலீஸ் விசாரணையில் பி.ஆர்.பழனிச்சாமி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக தன்னிடம் நெருங்கிய பழகிய அரசியல் புள்ளிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பெயர்களையும் பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இதுவரை பல கோடி ரூபாய் ஆதாயம் பெற்று உள்ளதாகவும், அவர்களது சொந்த உபயோகத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை இலவசமாக பெற்று உள்ளதாகவும் வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசியல் புள்ளிகள் சிலரது பெயர்களையும் விசாரணையில் தெரிவித்துள்ள பி.ஆர். பழனிச்சாமி அவர்கள் பெற்ற ஆதாய விவரங்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் புள்ளிகள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மாலை வரை போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
அப்போது மேலும் பல்வேறு தகவல்களை பி.ஆர்.பழனிச்சாமி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பி.ஆர். பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், உறவினர்கள் மகாராஜன், தெய்வேந்திரன், முருகேசன் ஆகியோரது முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து அவர்கள் போலீசில் சரணடைய முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற குவாரி அதிபர்களும் இன்னும் ஓரிரு நாளில் போலீசில் சரண் அடைகிறார்கள். கிரானைட் முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
கிரானைட் முறைகேடு ஆவணங்களை மறைத்ததாக ஏற்கனவே தாசில்தார் உள்பட 9 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் கிரானைட் தொடர்பான வழக்கு ஆவணங்களை மறைத்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கிரானைட் நிறுவனங்களுக்கு உதவியதாக அரசு கனிம வள ஊழியர் சீனிவாசனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே மேலூர் பகுதியில் உள்ள 175 கிரானைட் குவாரிகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் 90 குவாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் பதுக்கப்பட்ட கிரானைட் கற்கள் ஆகியவற்றை அதிகாரிகள் குழு தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறது. இது தொடர்பான அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் அரசுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment