இணைய தளத்தில் வெளியான முத்தக்காட்சி பற்றி, மீண்டும் கேட்காதீர்கள் என்று ஆண்ட்ரியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ராஜீவ் ரவி, அனுராக் காஷ்யப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரது ஒளிப்பதிவு எனக்கு பிடித்தமான விஷயம். ஹீரோவாக இயக்குனர் பஹத் பாசில் நடிக்கிறார். தமிழில் டாப்ஸி, இலியானா போன்றோருக்கு டப்பிங் பேசியுள்ளேன். அதே போல மலையாளத்தில் பேச வாய்ப்பிருக்கிறதா என்கிறீர்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வசன உச்சரிப்புக்கு பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு பேச வாய்ப்பு இருக்கிறது. நடிப்புடன் டப்பிங் பேசினால் மட்டுமே அந்த நடிப்பு முழுமை பெறும் என்பது என் கருத்து. மலையாளத்தில் பாடுவதற்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. ஏனென்றால் மலையாளம் எனக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. இப்போது நடிக்கும் படம் மூலம் மலையாளத்தை கொஞ்சம் அறிந்துகொள்ள, படித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான முத்தக்காட்சி பற்றி கேட்கிறீர்கள். 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த படங்கள் வெளியானதில் கவலை இல்லை. அப்போது எங்களுக்குள் ரிலேசன்ஷிப் இருந்தது. முக்கியத்துவமில்லாத அதை ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லை.
No comments:
Post a Comment