திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், அப்பத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:-
ஒரு காலத்தில் தமிழ் ஈழம் என்று குரல் கொடுத்தவர்கள் இன்று எதிர்ப்பு குரல் தெரிவித்தால் என்ன பொருள்? நாதஸ்வர இசை முழங்கும்போது பக்கத்தில் உள்ள இன்னொரு வித்வானும் அதற்கு ஏற்றார் போல் நாதஸ்வரம் வாசித்தால் தான் கச்சேரி களைகட்டும். ஈழத்தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொடுக்க நானும், சில தமிழக தலைவர்களும் சேர்ந்து டெசோ மாநாட்டை மதுரையில் நடத்தினோம்.
அந்த மாநாட்டிற்கும், தற்போது நடைபெற்ற மாநாட்டிற்கும் பல வருடம் இடைவெளி இருந்தாலும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டு மாநாடுமே தமிழ் ஈழ வாழ்வுரிமையை பாதுகாக்கத்தான் நடத்தப்பட்டது. அன்று ஒன்றாக என்னுடன் சேர்ந்து பணியாற்றிவர்கள் இன்று வேறு இடத்திற்கு சென்று எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்.
ஈழத்தமிழர்களிடம் வீரம், ஆற்றல், அஞ்சாமை இருந்தது எல்லாம் இருந்தும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனால் தான் அவர்கள் கொல்லப்பட்டு வந்தனர். மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் நானும், அன்றைக்கு ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த என்.டி.ராமராவும், ராம்விலாஸ் பாஸ்வானும், வாஜ்பாயும் ஈழத்தமிழர் போராட்ட குழுவினரை அழைத்து, உங்களுக்கு என்ன குறை, ஏன் மோதிக்கொள்கிறீர்கள்? என்று கேட்டோம்.
அப்போது அவர்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று சத்தியம் செய்தனர். அவர்கள் அதை உறுதியாக கடைபிடித்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். அதன் கோட்டை முகப்பில் புலிக் கொடி பறந்திருக்கும். தமிழ் ஈழத்தில் இன்று தவிக்கும் மக்களை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் டெசோ மாநாடு நடத்துவதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தபோது, மத்திய அரசு அதிகாரி ஒருவர் பிரதமருக்கு தெரியாமல் ஈழம் என்ற வார்த்தையை ஒத்துக்கொள்ள முடியாது என்று அறிவித்தார். அதைக் கேட்ட எனக்கு அடங்காத கோபம். இது குறித்து டி.ஆர்.பாலுவிடம் கேட்டேன் அவர் டெல்லிக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
சங்க இலக்கியங்களிலேயே ஈழம் என்ற வார்த்தை உள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அதன்பிறகு மனம் திருந்தி ஒத்துக்கொண்டு, ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தி மாநாடு நடத்தலாம் என்று அனுமதி அளித்தனர். மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியோடும், உற்சாகத்தோடும் அங்கு வந்து கலந்து கொண்டனர்.
அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதை உருவாக்கி தந்தவர்கள் தமிழக ஆட்சியாளர்கள்தான். இந்த மாநாடு வெற்றிகரமாக நடக்க காரணம் என்னுடைய உழைப்பு மட்டும் அல்ல, மு.க.ஸ்டாலின் உழைப்பு மட்டும் அல்ல. அதற்கு முக்கிய காரணம் மாநாட்டிற்கு தடைவிதித்த ஜெயலலிதா அரசுதான் காரணம்.
அவர்களுக்கு மாநாட்டில் நன்றி சொல்ல மறந்து விட்டேன். தற்போது நன்றி சொல்கிறேன். ஒரு சிலர் இந்த மாநாடு பயனற்றது என்றும், இதனால் பயன் ஒன்றும் ஏற்படாது என்று கூறுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். டெசோ மாநாடு 12-ந் தேதி நடந்து முடிந்தது.
அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஒரு பிரதியையும், சோனியாகாந்தியை சந்தித்து மற்றொரு பிரதியையும் வழங்கினார்கள்.
அதோடு விடாமல் நாம் மேலும் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதையும் சேர்த்து விரைவில் 20 அல்லது 30 நாட்களுக்குள் டெசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா. மன்றம் அனுப்பப்படும். அந்த தீர்மானங்களை டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மூலம் வழங்கப்படும். ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்

No comments:
Post a Comment