விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்தை ஆதரித்து பகண்டை கூட்டு ரோட்டில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் பேசினார்.
அவர், ‘’தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அதனை தோற்கடிக்கவேண்டும் என்ற லட்சிய உணர்வோடு உங்களை தேடிவந்திருக்கின்றோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய பகைவனாக உள்ளது.
நம் தமிழ் மக்களின் உரிமை, உடமை, உணர்ச்சி, உயிர் ஆகியவற்றிற்க்கு எதிராக இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி ஆகும். எனவே அதனை தோற்கடிக்கவேண்டும். கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழ் மீனவர்கள் இதுவரை 550 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஒரு தமிழ் மீனவன் குடும்பத்துக்காவது காங்கிரசார் அனுதாபம் தெரிவித்தது உண்டா? நமது வலிமை மிக்க ரானுவம் தமிழ் மீனவரை காப்பற்றவில்லை. அதேசமயம் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களையும் நமது ரானுவம் பிடிக்கவில்லை.
எல்லை தாண்டி செல்லும் கேரள மீனவர்களை இதுவரை இலங்கை கடற்படையினர் தாக்கப்பட்டதில்லை.
இது ஏன்? தமிழக மீனவர்கள் பற்றி கேள்வி கேட்க ஆளில்லை என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே இலங்கை கடற்படை நமது மீனவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர்.
எனவே இதனை தேசிய பிரச்சனையாக கருதுகின்றோம். உலகத்திலேயே தமிழனுக்கு இரண்டு இடம் சொந்தம் ஒன்று தமிழ் மண் மற்றொன்று ஈழத்தமிழ் மண் ஆகும். தமிழீழ மண்ணின் உரிமைக்காக போராடிய நமது சகோதர்களை நேரடியாக தாக்கமுடியாத சிங்களனுக்கு இந்த காங்கிரஸ் அரசு ஆயுதம் வழங்கியது.
அதன் மூலம் தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள மக்களை கம்பிவேலியின் உள்ளே அடைத்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டைவிட்டே ஓட ஓட விரட்டவேண்டாமா? மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் அந்த பணத்தை நம்மிடம் தரும்போது வாங்குவதற்கு கவலைப்படாதீர்கள்.
வாங்கிய பணத்தை கோவிலில் சாமிக்கு மஞ்சள் துணிகட்டி உண்டியலில் தட்சணையாக போடுங்கள். முரசு சின்னத்திற்க்கு வாக்களித்து விஜயகாந்தை ஆதரிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பேசினார்.
இன்றைய செய்திகள்...
- நிர்வாணமாகிறார் பூனம் பாண்டே
- மும்பையில் பிரபு தேவா - நயன் திருமணம்!
- 'கத்தாதீங்க நான் குழம்பிடுவேன்' :விஜயகாந்த்
- ஏப்ரல் 14ல் தெய்வத்திருமகன் இது படமல்ல பாடல்
- அனுஷ்கா, இலியானாவால் குழப்பத்தில் சிம்பு
- கருணாநிதிக்கும் எனக்கும் பங்கு சண்டையா? விஜயகாந்த்...
- ஜெயசீலனை ஏன் வெளியேற்றினேன் : விஜய் அப்பா விளக்கம...
- விஜய் ரசிகர் மன்ற தலைவர் திமுகவுக்கு பிரச்சாரம்
- மதிமுக இல்லாதது இழப்புதான்: பிரேமலதா விஜயகாந்த்
- `நான் வடநாட்டு பெண் அல்ல, தமிழச்சி தான்' ; குஷ்பு ...
- இரண்டாவது தேசிய விருது விக்ரமுக்கு விஜய் ஆசி!
- பிரச்சாரத்திற்கு கிளம்பினார் விஜய் அப்பா
- கல்வீச்சுக்கு நான் அஞ்சமாட்டேன்; நடிகர் வடிவேலு ஆவ...
- தேமுதிகவுக்கு 'குவாட்டர் பாட்டில்' சின்னம்: தேர்தல...
- அண்ணி என்ற பதவியே போதும்: பிரேமலதா
- கதாநாயகனுக்கும், காமெடியனுக்கும் உள்ள...: பாஜக
- ஜெயலலிதாவுக்கும் ராஜபக்சேவுக்கும் வேறுபாடில்லை: மத...
- போலியான உலககோப்பை இந்தியாவுக்கு வழங்கப்பட்டது : ரச...
- 2015 உலகக் கோப்பையில் ஆடுவாரா சச்சின்?
- எம்.ஜிஆர். கட்சியில் சேர்ந்து இருக்கிறேன்: விஜயகாந...
- கருத்து கணிப்பு வெற்றி தராது; மக்கள் கருத்துதான் வ...
- காங்கிரசுக்கு எதிரான யுத்தம் ஏன்? சீமான்
- சொன்னதை தராத கருணாநிதி சொல்லாத ஸ்பெக்ட்ரத்தை தந்தா...
- நடிகர் கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது? ராமதாஸ்
- வாக்கு கேட்க காங்கிரசுக்கு என்ன தகுதி இருக்கிறது? ...
- நண்பன் ரிலீஸ் எப்போது...
- நீதிபதிகளுக்கு மிரட்டல் விட்ட விஜய் அப்பா ! :தமிழ்...
No comments:
Post a Comment