முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் என எல்லா தலைவர்களுமே, தொகுதி மாறி இம்முறை போட்டியிட்டுள்ளனர். அவர்கள் இதற்கு முன் போட்டியிட்ட தொகுதிகளின் நிலவரத்தை பார்த்தால், முந்தைய தேர்தலில் பெற்றதை விட, அடுத்தடுத்த தேர்தல்களில் குறைவான ஓட்டுகளையே பெற்று வந்துள்ளனர்.
கருணாநிதி: முதல்வர் கருணாநிதி, 1989ல் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, 41 ஆயிரத்து, 632 ஓட்டுகளை பெற்றார். அதற்கு அடுத்த, 1991 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு, 30 ஆயிரத்து, 932 ஓட்டுகளையே பெற்றார். அதன்பின் சேப்பாக்கம் தொகுதிக்கு மாறிய முதல்வர், 1996 தேர்தலில், 46 ஆயிரத்து, 97 ஓட்டுகளை பெற்றார். 2001 தேர்தலில், 33 ஆயிரத்து, 273 ஓட்டுகளையே இதே தொகுதியில் அவர் பெற்றார்.
பின், 2006ல் நடந்த தேர்தலில், இதே தொகுதியில், 34 ஆயிரத்து, 184 ஓட்டுகளை பெற்றுள்ளார். அப்போது, 63.72 சதவீத ஓட்டுகள் இத்தொகுதியில் பதிவாகி இருந்தது. இதற்கு முந்தைய, 2001 தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில், 44.76 சதவீத ஓட்டுகளே பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி, திருவல்லிக்கேணி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில், தி.மு.க., தென்சென்னை மாவட்டச் செயலர் அன்பழகன் போட்டியிட்டார்; இம்முறையும் அதே, 63 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆனால், தொகுதி பெரியதாகி உள்ளதாலும், தி.மு.க.,வுக்கு சாதகமான இஸ்லாமியர்களின் ஓட்டுகளை, இவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தமிமுன் பிரித்து விடுவார் என்பதாலும், இத்தொகுதி மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில், 82 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலில் இத்தொகுதியில், 76.73 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. தி.மு.க.,வை சேர்ந்த மதிவாணன், 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சொந்த ஊரில் கருணாநிதி போட்டியிடுவதால், இந்த அளவு ஓட்டு சதவீதம் அவருக்கே சாதகமாக இருக்கலாம்.
ஜெயலலிதா: எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை பொறுத்தவரை, 1991ல் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, 69.30 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஜெயலலிதா, 67 ஆயிரத்து, 680 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அதன்பின், 1996 தேர்தலில் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டார். அப்போதும், 69.14 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுகவனம், 59 ஆயிரத்து, 148 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால், 2001ல் நடந்த தேர்தலில் தொகுதி மாறி ஆண்டிபட்டியில் போட்டியிட்டார். மனு நிராகரிக்கப்பட்டதால், இடைத்தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006 சட்டசபை தேர்தலில் இதே ஆண்டிபட்டியில் போட்டியிட்டு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அவர் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாறியுள்ளார்.
கடந்த, 2006 தேர்தலில் ஸ்ரீரங்கத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது, 74.50 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் இத்தொகுதியில், 74 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது ஜெயலலிதாவுக்கு பலமாகும்.
ஸ்டாலின்: துணை முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, 1984 முதல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை போட்டியிட்டார். 1984 மற்றும் 1991 தேர்தல்களில் அவர், அ.தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தார்.
கடந்த, 1996 தேர்தலில், 66 ஆயிரத்து, 896 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்ற ஸ்டாலின், 2001 தேர்தலில் இதே தொகுதியில், 49 ஆயிரத்து, 56 ஓட்டுகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். கடந்த, 2006 தேர்தலிலும், 49 ஆயிரத்து, 817 ஓட்டுகளையே பெற்று, 2,468 ஓட்டு வித்தியாசத்திலேயே வென்றார். இம்முறை தொகுதி மாறி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கடந்த, 2009 லோக்சபா தேர்தலின் போது, இத்தொகுதியில் தான், 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளை தி.மு.க., கூடுதலாக பெற்றது.
அதை நம்பி களமிறங்கி இருந்தாலும், இவரை எதிர்த்து சைதை துரைசாமியை நிறுத்தியதால், கடும் போட்டி நிலவியது. எனினும், புதிய தொகுதியான இதில், இம்முறை, 67 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது. வெற்றி பெற்றால் தொகுதிக்கு நன்மை கிடைக்கும் என்பதால், ஸ்டாலினை தேர்வு செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர்.
விஜயகாந்த்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை பொறுத்தவரை, 2006 தேர்தலில் தான் முதல் முறையாக களமிறங்கினார். அப்போது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை ரிஷிவந்தியம் தொகுதிக்கு மாறியுள்ளார். அங்கு, 83 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடந்த முறை, 68.75 சதவீதம் தான் பதிவானது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது விஜயகாந்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
இன்றைய செய்திகள்...
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...





No comments:
Post a Comment