தொண்டாமுத்தூர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக கைதாகி தண்டனை பெற்றவரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதிக்கான இடைத்தேர்தல், 2009, செப்., 18ல் நடந்தது. இத்தேர்தலில் காங்., மற்றும் கொ.மு.க., போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, கொ.மு.க.,மாணவரணி மாநில செயலர் லோகநாதன் தலைமையில் கட்சியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த பெரம்பலூர் கிருஷ்ணமூர்த்தி, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தபோது பிடிபட்டார். அவரிடம் இருந்து, 200 ரூபாயுடன் கூடிய, 150 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சரவணம்பட்டி போலீசார் விசாரித்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். கோவை ஜே.எம்.எண்: 2 கோர்ட்டில் வழக்கு விசாரிக்கப்பட்டு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தல் விதி மீறலுக்காக ஆறாண்டு காலத்துக்கு ஓட்டளிக்கும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு முறையாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்படவில்லை.
அதிருப்தி அடைந்த லோகநாதன், சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் தமிழக தேர்தல் கமிஷனர், மாவட்ட தேர்தல் அலுவலர், பெரம்பலூர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அறிவிப்பை வெளியிட வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விஜயகுமார், சென்னை வக்கீல் கிறிஸ்டோபருக்கு (லோகநாதனின் வக்கீல்) அனுப்பியுள்ள கடிதத்தில், குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவர் குன்னம் தொகுதி, கீழமாளிகை கிராமம் முருகபடையாச்சியின் மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நீக்கம் 2010, ஆக., 20ல் இருந்து ஆறு ஆண்டு காலத்துக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கொங்கு நாடு முன்னேற்றக் கழக மாநில மாணவரணி செயலர் லோகநாதன் தெரிவித்தார்.
- பாடகர் - பாடலாசிரியர்களை கவுரவித்த வசனகர்த்தா!
- படத்தை போட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி கேட்கிறார...
- தேர்தலில் பணம் வினியோகித்ததால் வாக்காளர் பட்டியலில...
- பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!
- நார்வே சென்ற இயக்குனர் பட்டாளம்!
- ஓட்டு எண்ணும் மையங்களில் அடியாட்கள் நுழைய வாய்ப்பு...
- ஜெ. புதிய மனு : நாளை விசாரணை
- நண்பனால் பகைவன் ஆகும் ஹீரோக்கள்
- மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கப்...
- குவாட்டர் அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம த...
- விஜய் கல்லெறி படாமல் தப்பியது எப்படி ?
- மே 13-ல் ஓட்டு எண்ணிக்கை: 17-ந்தேதி காலை 9.30 மணிக...
- பேரணியா? இலங்கைக்கு ஐநா எச்சரிக்கை!
- பணம் வாங்கிக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை சசிகலா தேர...
- தங்கபாலு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது சோனியாவின் வ...
- ஜூனில் விவாகரத்து... சொத்துக்களை ரம்லத்துக்கு எழுத...
- 'விஜய்' வீடு மீது தாக்குதல்!!
- மே 13 தேர்தல் முடிவு...மே 14 ப்ளஸ் டூ தேர்வு முடிவ...
- தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம் : எப்படியெல்லாம்...
- இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தம...
- கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் சுற்றும் பிரபல...
- ஹசாரேவை விமர்சிப்பதா? ராகுலுக்கு மோடி கண்டனம்
- ரிஷிவந்தியம் தொகுதியில் அதிகளவில் பெண்கள் ஓட்டளித்...
- தலைவர்கள் சிலையை மறைத்து கட்டப்பட்ட துணிகள் அகற்ற...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...

No comments:
Post a Comment